உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

இ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

104. ஹைதர் அலி - திப்பு சுல்தானும், பாளையக்காரர்களும் ஒரு வரலாற்றுப் பார்வை

மைசூர் உடையார்களின் படையில் நான்கு தலைமுறையாகப் பணியாற்றியது திப்புவின் குடும்பம். ஷாபாநாயக், பத்தேநாயக், ஐதர்நாயக் ஆகியோர் மைசூர்ப்படையில் பணியாற்றினர்.

தேவனஹள்ளிப் போரிலும் (1746) மராட்டியப் போரிலும் (1757) தம் பேராற்றலால் பெரு வெற்றிக்குக் காரணமாக இருந்த இளைய குதிரைவீரர் ஐதர்அலி மைசூர் உடையார் இம்மடி கிருஷ்ணராஜ உடையாரால் (1734-1766) அரண்மனை அத்தாணி மண்டபத்தில் பாராட்டப்பட்டு ‘பத்தே ஐதர் பகதூர்’ என்று பெரிதாகப் புகழப்பட்டார். மைசூரில் செல்வாக்குப் பெற்ற தேவராஜா, நஞ்சராஜா ஆகிய தளவாய்களின் நிர்வாகக் கோளாறு காரணமாகவும் மைசூர் அரச குடும்பத்தின் வலிமையற்ற போக்கினாலும் நாட்டு மக்கள் நலனுக்காக நிர்வாகத்தை ஏற்கவேண்டிய சூழ்நிலை ஐதர் அலிக்கு ஏற்பட்டது.

ஏறக்குறைய 1761ல் ஐதர்அலி முழு நிர்வாகத்தை மேற்கொண்டார். ஐதர் அலியும்,திப்பு சுல்தானும் 1799 வரை ஆட்சி செய்தனர். மைசூர் பரம்பரை அரச மரபினரான உடையார் மரபினரை அவர்கள் இருவரும் பதவி நீக்கம் செய்யவில்லை. ஐதர், திப்பு ஆட்சிக்காலத்தில் (1734-1799)

1) இரண்டாம் கிருஷ்ணராஜ உடையார் (1734-1766) 2) நஞ்சராஜ உடையார் (1766-1772)

3) ஏழாவது சாமராஜ உடையார் (1773-1776)

4) எட்டாவது சாமராஜ உடையார் (1776-1799)

ஆகிய மன்னர்களை மைசூர் வரலாறு குறிக்கிறது. 18.4.1792 அன்று எழுதப்பட்ட பட்டாலிக் கிரையப் பட்டயத்தில் “ராயஸ்ரீபெட்ட சாமராச உடைய அய்யனவர்கள் ஒபய காவேரி மத்தியரங்கமான சீரங்கப்பட்டணத்தில் ரற்றின சிம்மாசன பிருத்துவிராச்சியம் பண்ணுகுற

நாளையில்

ரூடராய்

அவர்கள்

காரியத்துக்குக் கர்த்தராகிய ஸ்ரீடீபு சுலுத்தான் சாயிபவர்கள் நாளையில்”

எழுதப்பட்டதாகக் குறிக்கப்படுகிறது.