உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

என்று பேரும் வணங்கப் பண்ணினார்கள்” என்று கூறியுள்ளார். (மெக்கன்சி ஆவணம் டி. 2967)

அதேபோல் பழைய கோட்டைப் பட்டக்காரர் சிறையில் இருந்தவரை திப்புசுல்தான் அதிகாரிகள் விடுதலை செய்து பழைய கோட்டைக்கு அழைத்து வந்து பட்டம் சூட்டிப் பட்டக்காரர் ஆக்கியதாக 1807ஆம் ஆண்டு சூலை மாதம் 12ஆம் தேதி எழுதப்பட்ட பழையகோட்டை ஆவணம் கூறுகிறது.

6

என்னையும் என்னைச் சேர்ந்த சனங்களையும் விடுதலை பண்ணி, நானும் என்னைச் சேர்ந்த சனங்களும் காரையூருக்கு வந்து சேர்ந்திருக்கும் நாளையிலே திப்பு சுலுத்தான் பகதூரவர்கள் காரியத்துக்கு கர்த்தராகிய கபூர் சாயபு அவர்கள் நாளையில் நாளது வருஷம் சுபதினத்தில் நாடனைவரும் கூட்டிவந்து எனக்குப் பட்டாபிஷேகம் பண்ணி நல்ல சேனாபதிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடி என்ற பேரை வணங்கப் பண்ணினார்கள்' என்பது அந்த ஆவணமாகும் (மெக்கன்சி ஆவணம் டி.2835)

கூ

தலையநாட்டுப் பட்டக்காரர் சவுந்தர பாண்டிய வள்ளல் கவுண்டர் இறந்துவிட அவர் மகன் வள்ளல் கவுண்டருக்குத் திப்பு சுல்தானின் அலுவலர்கள் முடிசூட்டியதாக ஓர் ஆவணம் கூறுகிறது.

“ராச்சியம் பிரபுத்துவம் பண்ணப்பட்ட திப்பு சுலுத்தான் துரைத்தனத்தில் அரமனை மனுஷாள் இருந்து நாடூரு பாளையப் பட்டார் அனைவரும் வந்து பட்டமும் கட்டிவச்சு கனகசபாபதி பாண்டிய வள்ளல் எண்ணப்பட்ட பேர் வௌங்கப் பண்ணினார்கள்” (மெக்கன்சி ஆவணம் டி. 3039)

திண்டுக்கல் பாளையக்காரர் குருவப்ப நாயக்கருக்கு ஐதர்அலி பல விருதுகள் கொடுத்ததை ஒரு ஆவணம் கூறுகிறது.

66

'அயிதரல்லிகான் பஹதூரவர்கள் மிகவும் சந்தோஷிக்க சீரங்கப் பட்டணத்திலிருந்து பச்சப் பல்லாக்கு, சிங்கமுக விருது, வெட்டுப்பாவாடை விசறப்பட்டது. 2 அவகோஜா சிக்குடுமண், பச்சக்கல், பெரிய கடுக்கன் காதிலே போடுகுறது 4, வஸ்திரங்கள் வெகுமதி அஞ்சு இதுகௌ எல்லாம் குடுத்து திண்டுக்கல் சீமை அதிகாரமும் பெத்த பறமனாவும் அனுப்பிவித்து வுங்களுக்குள்ள தண்டுகவை பவுசுதாரி அதிகாரத்துடனே கூடி சீமை அதிகாரமும் பெத்து இருக்கக் கடவதென்று காகித பத்திரங்கள் அனுப்பி வைத்தார்கள்” (மெக்கன்சி ஆவணம் 3351)