உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

219

திப்பு சுல்தான் ஒரு முறை விருப்பாட்சி வந்தபோது இடையகோட்டை பாளையக்காரன் முத்து வெங்கடாத்திரி நாயக்கரை “பெத்தபிள்ளைபோல்” நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதிகாரிகளும் தக்க மரியாதை செய்தனர். இதனை ஆவணம் பின்வருமாறு கூறுகிறது.

மகாராசமானிய ராசஸ்ரீ டீபு சுல்தான் நவாபு அவர்களும், பெரிய பாளையமும் வந்து விருப்பாட்சியிலே இறங்கியிருந்த முன்னிலும் அவர் பேட்டி செய்து கொண்ட முன்னுக்கு சிருது வெகுமதியும் குடுத்து நவாபு சையது சாயபு அவர்களைப் பார்த்து இந்த இடையகோட்டை குமாரமுத்து வெங்கடாத்திரி நாயக்கனை பெத்தபிள்ளை மரியாதியாயி நடப்பிவிச்சுக்கொள் என்று உத்தரவு செய்தார்கள். அந்த முன்னுக்கு சையிது சாயபு அவர்கள் குதிரையும் குடுத்து வெகுமதியும் குடுத்து அனுப்பி வச்சார்” (மெக்கன்சி ஆவணம் 2829)

இடையகோட்டை

பாளையக்காரர் குமாரமுத்து வெங்கடாத்திரி நாயக்கன் மகன் முத்துமலையாண்டி மீனாட்சி நாயக்கன் ஆட்சிக்கு வந்து இறந்தவுடன் அவனுடைய மனைவியர் வசந்தக் கத்தூரியம்மாள், பொன்னம்மாள் அவர்கள் இருவரையும் சையது சாயபு பட்டக்காரர்கள் ஆக்கியுள்ளார். மேற்கண்ட ஆவணம்

'அவர் பெண்சாதி வசந்தக் கத்தரியம்மாள், பொன்னம்மாள் அவர் நாளையில் சையது சாயபு அவர்கள் திண்டிக்கல்லுக்குத் தருவிச்சு வெகுமதியும் செய்து பட்டக்குரிப்பும் நேமுகம் செய்து அனுப்பிவித்தார்” என்று கூறுகிறது.

மேற்கண்ட ஆவணங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை 1981மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின்போது வெளியிடப்பட்ட "பாளையப் பட்டுக்களின் வமிசாவளி" என்ற தொகுதிகளில் அச்சாகியுள்ளன. ஐதர்அலி, திப்புசுல்தான் காலங்களில் பாளையக்காரர்கள் பட்டம் சூட்டப் பெற்றதையும் பட்டாபிஷேகம் செய்யப் பெற்றதையும் பதவிகளும் விருதுகளும் பெற்றதையும் பாளையக்காரர்களின் மனைவிமார்கள் கூட பாளைய ஆட்சி பெற்றதையும் விளக்கமாகக் கூறுகின்றன. இவை அனைத்தும் கும்பினியாட்சிக் காலத்தில் எழுதியவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலை 1761- முதல் 1799 வரை இருந்தது.