உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

P.A:582

புலவர் செ. இராசு 21

4. திப்பு சுல்தானின் கொடைபெற்ற

கொங்குநாட்டுக் கோயில்கள்*

ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் கொங்கு நாட்டில் பல பள்ளிவாசல்களிலும், தர்ஹாக்களிலும் தொழுகை நடத்தியதாகச் செவிவழிச் செய்திகளும், சில ஆவணங்களும் உள்ளன. திப்பு சுல்தான் கொங்கு நாட்டு சைவ, வைணவக் கோயில்கட்கும் கொடையளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம் மின்னக்கல்லில் ஒரு பார்ப்பனர் அக்கிரகாரம் உள்ளது. அப்பகுதிக்கு உத்தண்ட மல்ல சமுத்திரம் என்று பெயர். அங்கு பாமா ருக்மணி சமேத கோபாலகிருஷ்ணன் கோயில் உள்ளது. தந்தை காலத்திலேயே அவ்வூருக்கு வந்து 'திப்பு சுல்தான் பகதூர்' அவர்கள் அக்கோயிலுக்கு ஜோடிகை மானியமாக '575 ராஜகோபால வராகன்’கொடையளித்ததாக அக்கோயில் கல்வெட்டுக் கூறுகிறது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம், குன்னத்துரை அடுத்துள்ள குறிச்சி என்ற ஊரில் 'செல்லாண்டியம்மன் கோயில்’ உள்ளது. அக்கோயில் வழிபாட்டுக்காகவும், பூசாரிகள் நலத்திற்காகவும் திப்புசுல்தான் கொடை வழங்கியுள்ளார். அதற்குரிய ஆவணம் கறுப்பு கேன்வாஸ் துணியில் கன்னடத்தில் வெள்ளை எழுத்துக்களால் எழுதப்பட்டது. அந்த ஆவணம் மைசூரில் இந்திய கல்வெட்டுத் துறையின் முன்னாள் இயக்குநர் டாக்டர். கே.வி. ரமேஷ் அவர்கள் வசம் உள்ளது.

ஈரோடு மாவட்ம் பவானி வட்டத்தில் 'திப்பு செட்டி பாளையம்' என்ற ஊர்உள்ளது. அண்மையில் உள்ள ஜம்பையில் கிடைத்த பாடல் ஒன்றில் அவ்வூர் 'திப்பு செட்டி பாளையம்' என்று எழுதப்பட்டுள்ளது. திப்புசுல்தான் தொடர்பு இதனால் விளங்கும்.

.

"சேலம், நாமக்கல் மாவட்டக் கல்வெட்டுக்கள்". தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு.

  • பவானியாற்று பெருவெள்ளம்.