உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

5. கொங்கணேசுவரருக்குக் கொடை தந்த இஸ்லாமியர்கள்*

மராட்டிய மன்னர் இரண்டாம் ஏகோசி (1735-1737) காலத்தில் 6.12.1735 அன்று தஞ்சாவூர் கொங்கணேசுவரர்-ஞானாம்பிகை, அன்ன பூரணி ஆகியோருக்குச் சோமவாரக் கட்டளை நடத்த கடைக்கு ஒரு காசு கொடுத்து பூசையை நடத்தியவர்களில் ‘பாசிக்கடை மீரா சாயபு' ஒருவர்.

மராட்டிய மன்னர் பிரதாபசிங் (1739-1763) காலத்தில் 4.6.1758 அன்று ‘பலபட்டடைச் செட்டியார்கள், வர்த்தகர்கள், பதினெட்டுப் பட்டடை' ஆகியோருடன் சேர்ந்து “துலுக்கர் லெப்பை" வியாபாரிகளும் தஞ்சாவூர் கொங்கணேசுவரருக்கு மகமைக் கொடை கொடுக்க ஒப்புக் கொண்டு இசுலாமிய வணிகர்கள் பாசிப்பேட்டை அகமது ராவுத்தன்

அரசாங்கண்டு ராவுத்தன்

சின்னபிள்ளை ராவுத்தன்

ஆகியோர் பொதி ஒன்றுக்கு முக்கால் பணம் கொடுத்தனர்.

பிரவுர ராசகிரியார்

சந்தப்பேட்டை

சயிது ராவுத்தன் மகன் முத்துராவுத்தன்

ராசகிரியார் மீரா லெப்பை

மூக்குப்புறி கூனமீரா லெப்பை

கிறுத்து லெப்பை

மாதாரு லெப்பை

மாம ராவுத்தன்

எலிப்பாடி ராவுத்தன்

மீரயாளி ராவுத்தன்

களு சாத்தின ராவுத்தன்

சின்ன மீரா லெப்பை

பெரிய மீரா லெப்பை

ஆகியோர் கட்டு ஒன்றுக்கு முக்காணி பணம் கொடுத்தனர்.

  • தஞ்சை மராட்டியர் செப்பேடுகள்: தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு செ.இராசு, பக் - 91, 152, 154.