உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு 3 23

6. வராகசாமி கோயிலுக்கு சாத்துல்லாகான் காலக் கொடை*

டில்லி பேரரசர் பரூக்ஷா பாதுஷா ஆட்சியின்போது அவரின் கீழ் கர்நாடக நவாபாக இருந்தவர் நவாப் சாத்துல்லாகான் சாகிப் அவர்கள். அவருடைய ஆணையின்படி ராஜா தோடர்மால் மூலம் ஸ்ரீமுஷ்ணம் வராகசாமி என்ற பெருமாள் கோயிலுக்கு கீழ் புளியங்குடி, புத்தூர், நெடுஞ்சேரி, மலையான்புத்து முதலிய 5 ஊர்களை மானியமாகக் கொடுத்து அதை நிர்வகிக்க உள்ளூர்ப் பாளையக்காரருக்கு அதற்குரிய சன்னதும் கொடுத்தார்.

இச்சிறப்பு மிகு கொடை 1.5.1714 அன்று அளிக்கப்பட்டு அதற்குரிய செப்பேடும் எழுதப்பட்டது.

  • Annual Report on Epigraphy 15(A)1953

87 (A) 1953