உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

> தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

7. கான் சாகிபு வரலாற்றில் மீனாட்சியம்மன்

ஆர்க்காட்டு நவாப் முகமதலியிடம் சுபேதாராகப் பணி யாற்றிய கான்சாகிபு முறையாக வரிவசூல் செய்யவும், அடங்காத பாளையக்காரர்களை அடக்கவும் மதுரை மண்டலத்தை வரிவசூலிக்கும் குத்தகையைப் பெற்றிருந்த கும்பினியார் சார்பில் 1757ஆம் ஆண்டு மதுரைக்கு அனுப்பப்பட்டார்.

வந்த அன்று மீனாட்சியம்மனை வணங்கியதாக அவர் வரலாற்றுப்பாடல் கூறுகிறது.

“நானூறு பொன் கையில் கொடுத்து – அந்த

நாழிகையில் மீனாட்சிக்குச் சிறப்புச் செய்யச் சொல்லி’

பானுமதி சூடும் மீனம்மாள் - பாதம்

பணிந்து சொக்கேசரையும் வலமாக வந்து

கர்த்தாக்கள் வந்திருக்கும் மேடை – அந்தக்

கருங்கல்லுச் சவுக்கையிலே ஒயிலாகச் சாய்ந்து மீனாட்சி கிருபைகளினாலே - நல்ல

வெங்கலக் கதவுதனைப் பேர்த்தவனெடுத்து தீரன்எனும் கான்சாகிபு துரைதான் – அதிலே ஒரு கோடி திரவியம் இருக்க மனமகிழ்ந்து விஸ்தார அரண்மனையும் கட்டி – அதிலே மேல்வீடு மாளிகையும் தானுண்டு பண்ணி அரண்மனையிலே மகிழ்வாக இருந்து ” (பக்கம் 25)

என்பது அப்பகுதியாகும்

கான் சாகிபு

மதுரை மீனாள் தாயே

எனக்கிந்தத் திரவியத்தைக் கொடுக்க வேணும்

என்று வேண்டிக் கொண்டாராம் (பக்கம் 31)

கான்சாகிபு மனைவி ‘மாஷா' பிரெஞ்சுக் கத்தோலிக்கக் கிறித்துவப் பெண்ணாக இருந்து இஸ்லாம் மார்க்கம் மாறியவள். அவளும் பலமுறை நினைத்து வேண்டியதாகவும், வணங்கிய தாகவும் நூலில் கூறப்படுகிறது.

கான்சாகிபுவின் பணியாளர்களே சதிசெய்து அவரைப் பிடித்துக் கொடுக்க வரும்போது மதுரை மீனாட்சியே ஒரு