உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

25

பார்ப்பனப் பெண் வடிவத்தில் வந்து எச்சரிக்கை செய்ததாகவும் பார்ப்பாரப் பேய் மிரட்டுவதாக எண்ணி எவரிடமும் கான்சாகிபு கூறவில்லை என்றும் கதைப்பாடல் கூறுவது, நம் உள்ளத்தை உருக்குவதாக உள்ளது.

-

“ராசபர மேஸ்வரி மீனாள் பார்ப்பாரப் பெண்போல மீனாள் லோகநாயகியும் கானனுக்கு மோசம் வந்ததென்று

பாதகன் தலைமாட்டில் வந்துநின்று கொண்டு உன்னுடைய உப்பு தின்னுபோட்டு - கானு உந்தனுக்கு ரண்டகம் நினைந்திட்டாரப்பா இனிமேலே மதுரையிலிருந்தால் – நீயும் இறந்து போவாயடா கான்சாகிபு துரையே மலையாளம் போய்ச் சேரு கானு – என்று மதுராபுரி மீனாளும் சொல்லினாளப்பா பார்ப்பாரப்பேய் வந்து லவுண்டி - நம்மைக் கட்டியே மிரட்டுதென்று கான்சாயபு துரையும் திடீரென்று முழித்தப்போ பார்த்து - கானு சேதிகளை எவரோடும் சொல்லாம லிருந்தான் "கான்சாகிபு சண்டை' கதைப்பாடல் பகுதியாகும்

என்பது

(பக்கம் 111)