உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

221

ஆயுதங்களை மலையில் ஒளித்து வைத்திருந்தார் என்ற ஒரே குற்றத்திற்காக நிலக்கோட்டை பாளையத்தை ஜப்தி செய்ய ஆர்டீசு துரை காலத்தில் “சிறாது சிப்பாய்களும் கும்பினி மனுஷாளும்" வந்தனர். பாளையக்காரர் ஓடிவிட்டார். அவர் தலையைக் கொண்டு வந்தால் 1000பொன் இனாம் என்றும், அவருடைய குஞ்சு குழந்தைகளையும் மனைவியையும் கொண்டு வந்தால் 50 பொன் என்றும் அறிவித்தார்கள்.

மனைவி அகப்பட்டுக் கொண்டதால் பாளையக்காரரும் பிச்சைக்காரர் வேடத்தில் வந்து ஆர்டீசுதுரை காலில் விழுந்து கெஞ்சினார். பத்து நாள் கழித்து அவர் ஆயுதங்களைப் பறிமுதல் செய்ததால் அதற்கு 131 பொன் கொடுத்தார்கள். பின்னும் பலநாள் கழித்து மாதம் 50 ரூ சம்பளம் கொடுத்து அனுப்பினார்கள்.

பின்னர் பேரீஷ்துரை வந்தபோது கேட்டுக் கொண்டதில் (5900 பொன் கொடுத்த பாளையத்துக்கு) 11750 பொன் வரி நிர்ணய செய்து பாளையத்தைக் கொடுத்தார்கள்.

“மழை அருந்ததாயிருந்ததினாலேயும், காச்சலில் சனம் இறந்து போனதுனாலேயும், சாகுபடியில்லாமல் இப்படி நாலா விதத்திலும் வருசத்துக்கு 4000, 3000 தக்கு விழுந்தது. அதற்காக நிலக்கோட்டை பாளையம் ஜப்தி செய்யப்பட்டது. (மெக்கன்சி ஆவணம் எண் 3161)

ரெட்டியாம்பாடி பாளையக்காரர் முத்துக்காடி தொப்ப நாயக்கர் இறந்துவிட அவர் தம்பி ராமசாமி தொப்பய்ய நாயக்கர் பாளையக்காரர் ஆனார். அண்ணன் இறந்ததற்காக இராமேசுவரம் சென்றிருந்தபோது அவர் பாளையம் கும்பினியால் ஜப்தி செய்யப்பட்டு கும்பினி மிட்டவாக்கி அதனை ஆய்க்குடி பாளையக்காரருக்கு விற்று விட்டார்கள். திரும்பி வந்த பாளையக்காரர், “கும்பினியார் தயவுகோரி" விண்ணப்பித்தார். ஒரு பயனும் இல்லை.

“என் ரெட்டயாம்பாடிக்குச் சேர்ந்த குப்பம்பாளையத்தில் குடியிருப்புக்காரனாய் ரொம்பவும் நொந்து மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டு நானும் என்னைச் சேர்ந்த ஆண்கள் 3 பெண்கள் 6 வேலைக்காரர்கள் 4 ஆக சனம் சீவனத்துக்கு மார்க்கமில்லாமல் மிகவும் இளப்பத்துடனே மகா ராஜஸ்ரீ கும்பினியாரவர்கள் கடாட்சத்துக்குப் பாத்திரவானாக யிருக்கிறேன்”