உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

“இப்படிக்கு ரெட்டையம்பாடி சபத்தி சமீன்தாரி றாமசுவாமி தொப்பனாயக்கர் 1816 யேப்பிரல் 30 தேதி” (மெக்கன்சி ஆவணம்

3256)

பின்னர் ரெட்டையாம்பாடி 17 கிராமங்கள் அடங்கிய பாளையத்தைக் கும்பினியார் ஏலம் விட்டார்கள். ஆய்க்குடி ஜமீன்தார் குமாரக் கொண்டம நாயக்கன் ஏலத்தில் எடுத்தார்.

கும்பினி உத்தரவுக்கு விரோதமாக நடந்தார் என்று கூறிப் பல பாளையக்காரர்களையும், அவர்கள் மக்களையும் கும்பினியார் தூக்கிலிட்டார்கள். விருப்பாட்சி பாளையக்காரர் கும்பள நாயக்கரையும் அவர் மூத்தமகன் பட்டத்துக்குரிய முத்துவேல் நாயக்கரையும் அவர்கள் பாளையப்பட்டான விருப்பாட்சியி லேயே தூக்கிலிட்டார்கள்.

"கும்பினியாரவர்களுக்கு விரோதியான தம்பாக் கவுண்ட னையும் (தீரன் சின்னமலை) லக்கனாயக்கரையும் ஆதரிச்சது போலேயு ஸ்ரீரங்கப்பட்டணத்திற்கு ஆளனுப்பிவிச்சார் என்றும் கும்பினியார் உத்தரவுக்கு விரோதியாக நடந்தார் என்றும் ஆயாசனத்துனாலே என் தொகப்பனாராகிய குப்பள நாயக்கரையும் அவருடனே கூட இருந்த என் தமயன் முத்துவேல் னாயக்கரையும் துற்மதி வருஷம் கார்த்திகை மாதம் விருப்பாட்சியில் தூக்குப்போட்டு தெய்வகதியானார்கள்" (மெக்கன்சி ஆவணம்

GTGODT. 3259)

மேற்கண்ட ஆவணங்களின் மூலம் ஐதர்அலி, திப்பு சுல்தான் ஆட்சிக் காலத்தில் பாளையக்காரர்கள் நிலையும், கிழக்கிந்திய கும்பெனியார் காலத்தில் பாளையக்காரர்கள் நிலையும் தெளிவாகத் தெரிகிறது. ஐதர்அலி, திப்புசுல்தான் ஆகியோர் மிக அதிக வரி வாங்கினர்; பாளையக்காரர்களைக் கொடுமைப்படுத்தினர் எனச் சிலர் எழுதியுள்ளது தவறு என்றும் தெரிகிறது.

திப்பு சுல்தானின் அதிகாரியாக மீரா சாயபு திண்டுக்கல்லில் இருந்தபோது அங்கு சர்க்கார் பள்ளிக்கூடமும், சர்க்கார் தர்ம வைத்தியசாலையும் இருந்தன. தமிழ், கிரந்தம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் கற்றுக் கொடுக்கப்பட்டன. அதற்காக சர்க்கார் சம்பள ஆட்களை நியமித்திருந்தார்கள்.

- கோபால கிருஷ்ண அய்யன், 26.6.1816. (மெக்கன்சி ஆவணம் டி 3013; ஆர் 8267)