உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு 223

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம் மின்னக்கல்லுக்கு உத்திண்டமல்ல சமுத்திரம் என்று பெயர். அங்குள்ள அக்கிரகாரத்தில் கோபால கிருஷ்ணர் கோயில் உள்ளது. அங்கு மைசூர் கன்னட பிராமணர்கள் வந்து வழிபாடு செய்கின்றனர். திருப்பணியும் செய்துள்ளனர். அக்கோயிலுக்கு திப்பு சுல்தான் ஜோடிகை மானியமாக 575 ராஜகோபால வராகன் கொடுத்ததாக அக்கோயில் கல்வெட்டுக் கூறுகிறது.

(நாமக்கல்- சேலம் மாவட்டக் கல்வெட்டுக்கள்)