உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

225

106. தமிழ்நாடு அரசு சுவடி நூலகத்தில் இஸ்லாமிய ஆவணங்கள்

சென்னைப் பல்கலைக் கழக வளாகத்தில் பொது நூலகத்தின் உள் மாடியில் தமிழ்நாடு அரசின் சுவடி நூலகம் உள்ளது. அந்தச் சுவடி நூலகத்தில் இஸ்லாமிய ஆவணங்கள் 2000 உள்ளன. உருது (இந்துஸ்தானி), அரபு, பர்ஷியன், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட ஆவணங்கள் அங்கு உள்ளன.

அவை தனித்துச செய்யப்பட்ட ஒரு வகைக் கறுப்பு மையால் எழுதப்பட்டவை. பல ஆவணங்கள் 200 ஆண்டுகட்கு மேலாகியும் இன்றும் மிகத் தெளிவாக உள்ளன. அவைகளைத் தொகுத்து “A Descriptive Catalogue of the ISLAMIC Manuscripture” என்ற பெயரில் பல தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. அவைகட்கு முறையான வரிசை எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. பொது நூலகம் போல் யார் வேண்டுமானாலும் அனுமதிபெற்று ஆவணங்களைப் பார்வையிடலாம். பிரதி எடுத்துக் கொள்ளலாம். அவைகளைப் பராமரிக்கவும் ஆய்வு செய்யவும் வெளியிடவும் ‘பண்டிட்’என்ற பதவியில் நிபுணர் உள்ளார்.

அங்கு நீதிநெறி, மருத்துவம், அறிவியல், இறையியல், தத்துவம், சமயம், இலக்கியம், மரபியல், வரலாறு, பழமொழிகள் தொடர்பான ஆவணங்கள் உள்ளன. இஸ்லாமிய ஆர்வலர்கள் அந் நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

A DESCRIPTIVE CATALOGUE

OF THE ISLAMICMANUSCRIPTS

(VOLUME VI

بغداد تشریح

D: A Zubarnssa. A & BED PD

GEN. EDITOR

Natana. Kasinathan, MLA.