உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

12. சங்கர மடத்திற்கு கோல்கொண்டா சுல்தான் கொடை*

கோல்கொண்டா சுல்தான் அபுல் ஹசன் தனாஷா என்பவர் காஞ்சிபும் சங்கரமடத்திற்கு 16.11.1677 அன்றும், 1686ஆம் ஆண்டும் இரண்டு கொடைகள் அளித்துச் செப்பேடுகள் வெட்டிக் கொடுத்துள்ளார்.

அச்செப்பேடுகள் தெலுங்கிலும், பெர்ஷிய மொழியிலும் எழுதப்பட்டுள்ளன. ஆனால் எழுத்துக்கள் தெலுங்கு வரிவடிவில்

உள்ளன.

முதல் செப்பேடு

காஞ்சிபுரம் காமகோடி பீடத்தின் பூஜைக்காகவும், இதர மடத்தின் செலவுகட்காகவும் வருடந்தோறும் 115 வராகன் பொன் அளிக்க ஆணையிடப்பட்டதைக் கூறுகிறது. இச்செப்பேடு 16.11.1677 அன்று எழுதப்பட்டது.

இரண்டாம் செப்பேடு

சுல்தான் அபுல்ஹசன் தனாஷா தன் ஆட்சிக்குட்பட்ட கிராமமான ‘மேல்பாக்கம்' என்ற பெரிய கிராமத்தின் வருவாய் முழுவதையும் காஞ்சிபுரம் மடத்தில் உள்ள சந்திரமவுலீச்சுவர சுவாமியின் பூசைக்காக ஒவ்வொரு போகமும் தவறாமல் சந்திரசூரியர் உள்ளவரை கொடுக்க ஆணையிட்டார்.

மேல்பாக்கத்தில் ஒரு சிறு பகுதி சிறு பகுதி சங்கராச்சாரியார் விருப்பப்படி ஸ்ரீராமா சாஸ்திரிகள் என்பவருக்கு வழங்கப்பட்டது. இச்செப்பேடுகளில் கோல்கொண்டா சுல்தானின் அதிகாரிகள் அக்கண்ணா, மாதண்ணா ஆகியோர் குறிக்கப் பெறுகின்றனர்.

  • தமிழ்நாட்டுச் செப்பேடுகள்; இரண்டாம் தொகுதி: ச. கிருஷ்ணமூர்த்தி:

பக்கம் 247

-

248