உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

31

13.சங்கர மடத்திற்கு இஸ்லாமியர் மரியாதை*

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரில் மேலக்காவேரிப் பகுதி இஸ்லாமியர்கள் மொகரம் பண்டிகைக்கு இசை, வாத்தியக் கருவிகள் துணையுடன் நகரில் பல தெருக்களில் ஊர்வலம் போவது வழக்கம்.

6.9.1862 அன்று அவ்வாறு மொகரம் பண்டிகை ஊர்வலம் போகும்போது சங்கரமடத்தின் எதிரில் ஐம்பது கஜ தூரத்திற்கு இசைக்கருவிகள் வாசிப்பது இல்லை என்று முடிவு செய்து அதைத் தம் பிற்காலத்தவர்களும் தெரிந்து கொள்ள சங்கரமடத்தின் எதிரில் உள்ள சாலையில் இருபுறமும் 50 கஜம் தூரம் இடைவெளியும் வடக்கிலும் தெற்கிலும் எல்லைபக்கம் நட்டு இந்த விபரத்தைத் தெரிவித்துள்ளனர். அக்கல்வெட்டுக்கள் இன்றும் உள்ளன.

  • நேரில் பார்த்துப் படிக்கப்பட்டது.