உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

37

17. மதுரை சுல்தான் காலக் கொடைகள்*

1) புதுக்கோட்டை மாவட்டம்; திருமெய்யம் வட்டம், ராங்கியம் பூமீசுவரர் கோயில் தென்புறச் சுவரில் “ஆதி சுரத்தானுக்கு யாண்டு 732 வது சித்திரை மாதம் 15 தியதி, பூர்வபட்சத்து ஏகாதசியும் திங்கட்கிழமையும் பெற்ற பூசத்துநாள்” என்று தொடங்கிக் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. பாடிகாவல் உரிமை அளிக்கப்பட்டுள்ளது.

- கல்வெட்டு எண் -669

2) ஈரோடு மாவட்டம், தாராபுரம் வட்டம், அயங்கியம் கலியுகக் கண்ணீசுவரர் கோயிலில் மகாமண்டப வடபுறச் சுவரில் எம்மண்டலமுங் கொண்ட ஆதிசுரத்தானுக்கு யாண்டு 751 அப்பிசை மாதம் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.

தென்பொங்கலூர்க்கா நாட்டு அலங்கியமான உத்தமசோ நல்லூர் வெள்ளாளன் தேவன் சிவந்தகால் பெருமாள் என்பவ நாயனார் ஞானமூர்த்திதே நாயனார் திருமடத்திற்கு இறையிலியாக நிலக்கொடை வழங்கியுள்ளார். 'ஆதிசுரத்தான்' என்பதை வீரசுந்தரன் என்று தவறாகப் படித்துள்ளனர்.

- 1920ஆம் வருட கல்வெட்டு அறிக்கை

மதுரை சுல்தான்கள் ஆட்சிக் காலத்தில் பல அறச்செயல்கள் நடைபெற்றுள்ளமையை ஆதிசுரத்தான் (மதுரை சுல்தான்) கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இதுபோல் இன்னும் பல கல்வெட்டுக்கள் இருக்கக்கூடும்.

திருச்சிராப்பள்ளி வட்ட இலுப்பூரிலும் ‘ஆதிசுரத்தான்' காலக் கொடைக் கல்வெட்டு உள்ளது.

  • புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுக்கள் - எண்669

Annual Report on Epigraphy - 160 of 1920