உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

மன்றம் போல அந்த அவை காணப்பட்டது. (1) ஸ்ரீரங்கநாத ஜீயர் (2) வேதவியாசபட்டர் (3) தானம் அண்ணுவய்யங்கார் (4) அமுல் சுப்பராயர் (5) பாரிசு சிராஸ்தார் வெங்கிட்டராயர் (6) கானு கோயில் சீனிவாசராயர் (7) கசானா வெங்கிட்டராயர் (8) கானு சமாளி பெடிகார் ரெட்டியார் (9) சிரஸ்தார் நாராயணய்யர் (10) சிரஸ் தார் குருநாதபிள்ளை (11) வீர ராகவ சோசி (12) சுப்பிரமணிய சோசி ஆகியோரும் தலத்தாரும் சிலர் இருந்தனர்.

தீர விசாரித்து நவாபு அவர்கள் பின்வருமாறு தீர்ப்பளித்தார். அதனை அட்டவணை குமாரசாமி முதலியார் ஓலையில் எழுதினார்.

'நவாபு சாயபு அவர்கள் சகலமான பேர்களிடத்திலும் தயவு ண்ணுகிறபடியினாலே தயா விசயமாய் ராசா நாள் முதல் ரெங்காச்சாரியாருக்குத் தீர்த்தமானபடியினாலே வேறே பேச்சுச் சொல்லாமல் உத்தரவு பண்ணினார். என்னவென்றால் இரு வருக்கும் தீர்த்த மரியாதை பேருக்குப் பாதியாய் ஒரு மாதத்துக்கு 15 நாள் அண்ணங்காருக்கும், 15 நாள் ரெங்காச்சாரியாருக்கும் திட்டம் பண்ணினார்கள்.

இதனாலே முசுத்திகள் தலத்தார் முதலானபேரும் வழக்காளி இருவரும் சம்மதியில் திட்டம் பண்ணினார்கள்.

அசூர் உத்திரவுப்படிக்கு வழக்காளி இருவரும் தீர்த்தம் மரியாதை கோவிலிலேயே நடக்க ருசுவும் மிராசு இதுகள் பேர் பாதியாய் அனுபவிச்சுக் கொண்டு எண்ணெய்க்கும் செச்சறைப் படாமல் தீர்த்தப் பிரசாதம் நடப்பிவிச்சுக் கொண்டு தம்முடைய காரியத்திலே இருக்கவும். ஒரு வேளையிலே இவர்களில் ஒருத்தர் இந்தத் தீர்ப்புக்கு சகித்தை பண்ணினார் சருக்காருக்கு நெர்த்தராய் மிராசம் விட்டு சர்க்கார் ஆக்கினைக்கும் உட்பட்டவராவார்.'

தமிழக வைணவ வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய இத்தீர்ப்பின் மூல ஓலையில் தொடர்புடையவர்கள் கையெழுத்துக்கள் உள்ளன.

தமிழக அரசின் கீழ்த்திசைச் சுவடி நூலகம் எண்.டி. 3891