உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு

புலவர் செ. இராசு 35

16. திருவரங்கத்தில் நவாபு செய்த பைசல்*

திருவரங்கம் கோயிலில் நீண்டநாள் தீர்த்தம் மரியாதை பற்றி

வழக்கு கந்தாடை அண்ணங்கார் வரதாச்சாரியார் ரெங்காச்சாரியார் இருவரிடையே நிலவி வந்தது. இவ்வழக்கு ஆர்க்காடு மன்னர் அசரத் நவாபு சாயபு அவர்களிடம் சென்றது. அவர் நேரில் வந்து விசாரித்துத் தீர்ப்பு அளித்த விபரம் ஒரு ஆவணமாக எழுதப்பட்டுள்ளது. அதன் மூல நகல் சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு கீழ்த்திசை சுவடிச் சாலையில் உள்ளது. அதன் எண்.டி.3891 ஆகும். அதன் விவரம் இங்கே அளிக்கப்படுகிறது.

ஆவணச் செய்தி

திருவரங்கம் வைணவர்களுக்குக் 'கோயில்' என்று அன்றும் இன்றும் பாராட்டப்படவது. சிறப்புமிகு அத்திருவரங்கத் தலத்தில் உள்ள கந்தாடை அண்ணங்கார் வரதாச்சாரியார் என்பவர் 1797ஆம் ஆண்டு ஆர்க்காடு மன்னர் அசரத் நவாபு சாயபு அவர்களிடம் ‘பிராது’ ஒன்றைக் கொடுத்தார். 10 தலைமுறை 120 ஆண்டுகளுக்கு முன்னிருந்து மதுரை நாயக்க மன்னர் சொக்கநாத நாயக்கர் காலத்திலிருந்து (1656 -1682) தம் பரம்பரை உரிமையை ரெங்காச்சாரியார் பரம்பரை அனுபவித்துக் கொண்டு

வருவதாகவும், அதைத் தமக்கு மீட்டுத் தருமாறும் கந்தாடை அண்ணங்கார் வரதாச்சாரியார் கேட்டிருந்தார்.

கந்தாடை குடும்பம் திருவரங்கத்தில் புகழ்வாய்ந்த பழைய குடும்பம். அவர்கள் பெயரில் திருவரங்கத்தில் கந்தாடை அண்ணன் அப்பன் திருமாளிகை என்ற பெயரில் மண்டபம் ஒன்றுள்ளது. அரங்கநாதர் நாள்தோறும் எழுந்தருளும்போது வைஷ்ணவர் களுக்கு அங்கு அன்னதானமிட பெரிய கோனம்மாள் என்பவர் 2.1.1535 அன்று 800 பொன் கொடையாக அளித்துள்ளார். அவர்கள் பரம்பரையில் கந்தாடை மாதவய்யங்கார் என்பவர் திருவரங்கம் கல்வெட்டில் குறிக்கப் பெறுகிறார்.

ஒருநாள் நவாபு சாயபு அவர்கள் திருவரங்கம் வந்து இவ்வழக்கை விசாரித்தார். விசாரணையின் போது வழக்காளிகள் இருவரும் இருந்தனர். மற்றும் திருவரங்கம் கோயில் தொடர்பான பன்னிரண்டுபேரை நவாபு நேரில் அழைத்திருந்தார். மக்கள் நீதி