உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

39

18. சலுகைகள் அளித்த சும்சுதீன் அடில்ஷா*

மதுரையில் சும்சுதீன் சுல்தான் அடில்ஷா ஆட்சி செய்யும் போது பொதுமக்கள், கடைக்காரர்கள், வணிகர்கள், உழவர்கள் ஆகியோருக்குப் பல்வேறு சலுகைகள் அளித்ததாக மதுரை சுல்தான் சுயாவுதீன் தர்காவில் உள்ள கல்வெட்டுக் கூறுகிறது.

  • Annual Report on Epigrphy 115 (D) of 1962

19. கள்ளர்களைப் பிடித்த ராவுத்தர்கள்*

நத்தம் பகுதி பாளையக்காரராக இருந்தவர் லிங்கைய நாயக்கர் அவரிடம் அலுவலர்களாக இருந்தவர்கள் சிங்கார ராவுத்தா வத்தலை ராவுத்தர் ஆகியோர். கி.பி. 1604ஆம் ஆண்டு கருங காலக்குடி அருகில் கள்ளர் திருடவந்தனர். சிங்கார ராவுத்தரும், வத்தலை ராவுத்தரும் திருடர்களைப் பிடித்துக் கொடுத்தனர். இச்செய்தி மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கருங்காலக் குடியில் உள்ள உள்ள உப்புச்சுனையின் மேல்பக்கப் பாறையில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு

1.

2.

3.

4.

5.

. ம் ம்

சகாப்தம் 1526

க்கு மேல் செல்லா நின்ற

குரோதி வருஷம் கார்த்திகை மாதம்

3 தேதி லிங்கைய நாயக்

கரையன் காரியத்

6. துக்கு கடவாரான சி

7.

ங்கார ராவுத்தர் வத்தலை ரா

8.

வுத்தர் கள்ளரைப் பிடித்து

9.

யுங் கள்ளன்...

(அழிந்து விட்டது)

  • Annual Report on Epigraphy - 150 of 1974