உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

23.கிணறும் குளமும் வெட்டிய அசன்கான்*

சென்னை மயிலாப்பூரில் பாட்ஷா பாக் என்னும் இடத்தில் உள்ள ஈத்கா பள்ளிவாசல் உபதேச மேடையருகில் ஒரு கல் உள்ளது. அதில் ஹிஜ்ரி 1135ஆம் ஆண்டு (கி.பி. 1722-23) எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. அசன்கான் என்பவர் அவ்வாண்டில் கிணறும் குளமும் அமைத்த செய்தி கூறப்படுகிறது.

  • Annual Report on Epigraphy 142 (D) of 1971

24. கால்வாய் வெட்டிய ஆர்க்காடு நவாப்*

ஹிஜ்ரி 1205ஆம் ஆண்டு (கி.பி. 1790-91) ஆர்க்காடு நவாப் வாலாஜா பாசன வசதிக்காகக் கால்வாய் ஒன்றை வெட்டினார். அக்கால்வாய் நவாப் பெயரால் ‘வாலாஜா கால்வாய்' என்றே இன்றும் அழைக்கப்படுகிறது.

  • Annual Report on Epigraphy 110 of 1955