உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

47

இடம்

காலம்

செய்தி

25. கால்வாய் வெட்டிய சையத் ஷா மொயினுதீன்*

கல்வெட்டு

கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து எட்டு கி.மீ. தொலைவில் உள்ள கிள்ளை என்ற கிராமத்தில் உள்ள பக்கிரி வாய்க்கால் மதகுக் கல்வெட்டு

கி.பி. 1875, மே மாதம் 10

சையத் ஷா மொயினுதீன் பார்ஷா சாயபு என்பவர் தன் முன்னோர் ஹஜரத் சையத் ஷா ரகமதுல்லா சாயபு தன் மானிய நிலங்களுக்குப் பாசன வசதி பெற வாய்க் காலையும் மதகையும் சொந்தப் பணத்தில் அமைத்ததை மீண்டும் புதுப்பித்த செய்தி கூறப்படுகிறது.

இவ்வாய்க்கால் ராஜா வாய்க்கால் பாயமான் பிரிவில் தொடங்கி பாசனத்துக்குப் பயன்பட்டு வெள்ளாற்றில் கலக்கிறது.

மக்கள் இவ்வாய்க்காலை பக்கிரி வாய்க்கால் என்றே இன்றும் அழைக்கின்றனர். மொயினுதீன் மகன் சையத் ஷா உயாம் 1905ல் வாரிசு இல்லாமல் இறந்தார். நீதிமன்ற ஆணைப்படி அறங்காவலர் வசம் நிலங்கள்

உள்ளன.

1. ஹஜரத் சைய்யத் ஷா ரகமதுல்லா சாயபுக்கு கிள்ளையிலிறு க்கப்பட்ட தன் இனாம் நிலங்களில் பாய்ச்சலுக்கு ஆதியி

2.

23

3.

4.

5.

6.

7.

8.

9.

10.

ல் சொந்தத்தில் பணம் போட்டு வாய்க்கால்

வெட்டி இந்த மதகும் கட்டினார் மதகு சி

கஸ்தாய் போனபடியால் மறுபடி மேற்படியா

றுடைய 4வது தலைமுறை பேரப்பிள்ளை சையது

ஷா மொயினுதீன் பார்ஸா சாயா தன் சொந்

தப்பணம் சிலவு செய்து இந்த மதகை அஸ்த்தியா

ரமும் புதிதாய்க் கட்டினார் 1875 வருஷம்

மே மாதம் 10 தேதி

  • 'ஆவணம்' 10, 1999: பக்கம் 91: தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு.