உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

26. கண்மாய் மடைக்கல் அமைத்த வத்தலை ராவுத்தர்

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கருங்காலக்குடியில் நத்தம் லிங்கைய நாயக்கரின் காரியத்துக்குக் கர்த்தராக இருந்தவர் வத்தலை ராவுத்தர். கருங்காலக்குடியில் வயலிப்பாறை என்னும் பகுதியில் உள்ள கண்மாயில் நீர்ப்பாசன வசதிக்காக மடை ஒன்றை வத்தலை ராவுத்தர் அமைத்தார். அவர் கட்டிய மடைக்கல்லிலேயே இக்கல்வெட்டும் பொறிக்கப்பட்டுள்ளது. இவர் கி.பி. 17ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் வாழ்ந்தவர். அமைக்கப்பட்ட குளத்தின் பெயர் வயலிக்குளம்.

கல்வெட்டு

1. வத்தலை

மடை

2. ராவுத்தர்

3.

தந்த ம

4.

டை

  • Annual Report on Epigraphy 157 of 1974