உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 ஐ தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

33. தஞ்சை பெரிய கோயிலில் சோனகன் சாவூர் பரஞ்சோதி*

மாமன்னன் முதலாம் இராசராசன் காலத்தில் (985-1014) கட்டப்பட்ட ஈடும் எடுப்பும் அற்ற தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் காந்தருவிகளுக்கும், தளிச்சேரிப் பெண்டுகளுக்கும் நாயகம் செய்யும் (தலைவர்) உயர் அலுவலராக இருந்தவர் ‘சோனகன் சாவூர்' என்பவர் ஆவார். அவர் தஞ்சாவூர்ப் புறம்படியில் இராஜவித்யாதரப் பெரும் தெருவில் வாழ்ந்து வந்தார்.

அவர் மூன்று தவணைகளில் (5+15+12) 32 பொற்காசுகள் கொடுத்து 96 ஆடுகளை விளக்கெரிக்கத் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் மூலப்பொருளாக வைத்தார். இவருக்குப் பரஞ்சோதி என்ற பெயர் பட்டப் பெயராக விளங்கியது.

சோனகன் காவூர் இராசேந்திரசோழன் காலத்தில் (1012-1044) ங்கை கொண்ட சோழபுரத்தில் பெருந்தரத்து அதிகாரியாகவும்; ருமந்திர ஓலை நாயகமாகவும் இருந்துள்ளார். இவை இரண்டும் பாறுப்பான பெரும் பதவிகள் ஆகும். இராசேந்திர சோழனால் சோனகன் சாவூருக்கு 'இராசேந்திர சோழக் கந்தருவப் பேரரையன்' என்ற உயர் பட்டமும் அளிக்கப்பட்டது.

2

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட முதலாம் ராசேந்திர சோழனின் எசாயம் செப்பேட்டில் இதே சாவூர்சோனகன் பரஞ்சோதி 'ஓலைநாயகம்' என்ற உயர் அதிகாரியாக “சோனகன் சாவூர் பரஞ்சோதி ஆன இராஜேந்திரச் சோழக் கந்திருவர் பேரரயன்” என்று குறிக்கப்படுகின்றன. டாக்டர். எ. சுப்பராயலு, ச. கிருஷ்ணமூர்த்தி, மா. சந்திரமூர்த்தி ஆகியோர் 'சோனகன்' என்று படித்து இஸ்லாமியர் என்று சரியாக எழுதியிருக்க, முன்னாள் தொல்லியல் துறை இயக்குநர்கள் டாக்டர் இரா. நாகசாமியும், நடன.காசிநாதனும் 'சோழகன்' 'சோழகோன்' என்று பிழையாகப் படித்துள்ளனர். 'சோனகன்' என்று தெளிவாக உள்ளது.3

‘சோனகன்’ என்ற சொல்லுக்குத் தமிழ் அகராதிகள் துலுக்கர் என்றே பொருள் கூறுகிறது. இராசராசன் தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்குக் கொடுத்த அணிகலன்களில் 'சோனகச்சிடுக்கு' என்பதும் ஒன்றாகும். "சோனகன்விளை, சோனகன் பேட்டை” என்பன தமிழ் நாட்டு இசுலாமிய ஊர்களாகும். கடலூர், தொண்டி, காயல்பட்டினம் போன்ற ஊர்களில் இசுலாம் பெருமக்கள் வாழும் தெருக்கள் “சோனகர்” தெரு என்று அழைக்கப்படுகிறது.‘

  • 1) S.I.I Vol II No 95

2) E.C.Vol X No 3

3) தமிழ்நாட்டுச் செப்பேடுகள். முதல் தொகுதி பக் 341, 342

-

4 "எசாலம் வரலாற்றுப் புதையல் பக் 124