உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

34. ஆனைமங்கலம் செப்பேட்டில் துருக்கன் அகமது*

57

கடாரத்து மன்னன் மாறவிஜயோத்துங்கபன்மன் சோழநாட்டு நாகப்பட்டினத்தில் கட்டிய சூளாமணி பௌத்த விகாரத்திற்கு இராசராசன் (985-1014) ‘ஆனைமங்கலம்' என்ற பேரூரைக் கொடையாக அளித்தான். இராசேந்திரன் காலத்தில் அதற்குரிய செப்பேடு எழுதப்பட்டது. அந்த ஆனைமங்கலச் செப்பேடுகள் ‘லெய்டன்’நகர அருங்காட்சியகத்தில் உள்ளது.

அந்தக் கொடைக்குப் பல ஊர் உயர் அலுவலர்கள் கையெழுத்திட்டுள்ளனர். அச்செப்பேட்டில் முக்கியமான பகுதி:

66

க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டுப் பட்டனக் கூற்றத்துப் பிரமதேயம் சன்னமங்கலத்துச் சபையோம் சொல்ல எழுதினேன் இவ்வூர்க் கரணத்தான் மத்யஸ்தன் துருக்கன் அகமுதனேன். இன என் எழுத்து என்றும் இப்படி பிடி சூழ்ந்து பிடாகை நட அறவோலை செய்து கொடுத்தோம்.

פיי

‘துருக்கர்' என்பது இசுலாமியர்களைக் குறிக்கும் சொ சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய கொங்கு நாட்டு அடியார்க்கு நல்லார் ‘யவனத் துருக்கர்' என்ற சொல்லைக் கையாளுகிறார்.

-

  • 1) கல்வெட்டு ஓர் அறிமுகம், பக்கம் 6

2) ஆனைமங்கலச் செப்பேடு. இப்போது இச்செப்பேடு லெய்டன் நகர அருங்காட்சியகத்தில் உள்ளது.