உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

35. திருமுருகன் பூண்டி ஆவணத்தில் இஸ்லாமியர்*

மதுரை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கோவை மாவட்டத்துத் திருமுருகன் பூண்டி, அவிநாசி, மங்கலம் முதலிய ஊர்களைப் பாலவேளாளர் பைசலிய கோத்திர வீரவிக்கிரம சோழியாண்டாக் கவுண்டர் நிர்வாகம் செய்து வந்தார். அவர் மதுரைக்கு வரிப்பணம் 15000 பொன் செலுத்த முடியாதபோது எழுமாத்தூர்ப் பனங்காடைகுலக் கொங்கு வேளாளர் பொய்ங்காக் கவுண்டரும், மருதுறை ஆந்தை குலத்து செல்லப்பக் கவுண்டரும், கொற்றனூர் ஆந்தை குல சரவணக் கவுண்டரும் ஆளுக்கு 5000 பொன் வீதம் கொடுத்து வீரவிக்கிரம சோழியாண்டாக் கவுண்டரிடம் அவ்வூர்களை விலைக்கு வாங்கினர்.

மாற்றத்தை உள்ளூர்ப்

அவ்வூர்களின் காணியுரிமை பொதுமக்கள் பலரும் ஆதரித்துக் கையெழுத்திட்டனர். அவர்களில் மூவர் இஸ்லாமமியர். பட்டயத்தில்

'முசலிமான் சேக்கு அப்துல்கான், இபுராமு மீராகான், மம்முது கான்” என்று காணப்படுகிறது.

  • கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள். தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடு