உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

36. பட்டக்காரர் பட்டாபிஷேகத்தில் கமால்சாயபு பங்கு*

59

இராமாயணத்தில் மிக முக்கியமான நிகழ்ச்சி இராமன் முடிசூடல். அம்முடி சூட்டு நிகழ்ச்சியில் மிக முக்கியமானவர்கள் பட்டாபிஷேகச் சடங்கில் பங்கு பெறுவார்கள். இராமர் பட்டாபிஷேகத்தில் அங்கதன் உடைவாள் ஏந்தியதாகக் கம்பர் பாடுகிறார். அங்கதன் வாலியின் மைந்தன்.

பழைய கோட்டைப் பட்டக்காரர்கட்கு முடிசூட்டும் பட்டாபிஷேக நிகழ்ச்சி மிக முக்கியமானது. கொங்கு நாட்டுப் பிற பட்டக்காரர்களும், பாளையக்காரர்களும், மிட்டாதார், மிராசுதார்களும், அரசு அலுவலர்களும், உற்றாரும், உறவினரும் கூடி செய்யும் மிக முக்கியமான நிகழ்ச்சி. அம்முடிசூட்டு விழாவில் முக்கியமான சடங்குகளில் மிக முக்கியமானவர்கள் மட்டுமே நேரடியாக பங்கேற்பர். பட்டாபிஷேகத்தில் பழையகோட்டை மரபு அரண்மனை ஆயுதங்களான சமுதாடு, வல்லயம், சொட்டை முனை என்ற ஆயுதங்களைப் பிடித்து பட்டாபிஷேகத்தில் பங்கு பெறும் உரிமை இசுலாமியப் பெரியவர்கட்கு அளிக்கப்பட்டிருந்தது.

19ஆம் பட்டக்காரர் கொற்றவேல் சர்க்கரை மன்றாடியார் முடிசூட்டுவிழா பழையகோட்டையில் நடைபெற்றது. அந் நிகழ்ச்சியில்,

“போர்வீரராம் ஐதர்அலி சர்க்காரின் புலிபோன்ற தாசில்களும்

புனிதமுள சிரஸ்துகளும் ஒருபுறம்

(தாசில்தார், சிரஸ்தார்கள்) வீற்றிருந்தனர்.

முடிசூட்டும்போது சமுதாடு வல்லயம் பழைய கோட்டைக் கேயுரிய சொட்டை முனை ஆயுதங்களைக் கமால் சாயபு பிடித்து நின்றதாகச் சடைப் பெருமாள்பிள்ளை பாடிய நீண்ட பாடலில் காணப்படுகிறது.

“தங்காது விசிறிவெண் சாமரை ளதுவீச

தகுந்தவா சனைநிமிர்ந்து