உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

UI

புலவர் செ. இராசு 65

41. மாரியம்மன் புகழ்பாடிய மதார்சா ராவுத்தர்

பொள்ளாச்சி - அம்பராம்பாளையம் ஐமால் ராவுத்தர் மகன் மதார்சா ராவுத்தர் பெரும்புலவர். கோவை - பொள்ளாச்சி வழியில் உள்ள சூலக்கல் மாரியம்மன் மீது அம்மானை, சிந்து, கும்மி போன்ற நூல்களைப் பாடியுள்ளார். அவை 1909, 1919ஆம் ஆண்டுகளில் பொள்ளாச்சி கோபால விலாச அச்சுக்கூடத்தில் அச்சிடப் பட்டுள்ளன.

கணித சக்கரம் உள்ளவளாம் - மாரி கம்பீரமான பரஞ்சோதி

பணிதி அளித்திடும் மாரியம்மன் - பதம் பாடிக்கும்மி அடியுங்கடி

என்பது கும்மிப் பாடல்களில் ஒன்று.

'செந்தமிழ் பாடும்படி செப்பினாள் மாரியம்மன்' என்று பாடிய புலவர் மதார்சா ராவுத்தர் தன்னைப் பற்றிக் கீழ் வருமாறு பாடியுள்ளார்.

“ஆம்பராவதி நதிசூழ் அம்பராம் பாளையத்தில்

ஜமால் ராவுத்தர்பெற்ற தபோபல புத்திரனாம் அங்கா பரமேசுவரி அம்புயப் பதங்களையும் மதுரைவீரன் உபய வசைமலர்த் தாளினையும் பக்தியுடன் நாளும் பரவித் துதிசெய்வோன் மாடன் முதலான மற்றுமுள்ள பேய்களையும் ஒட்டிக் கறுவறுக்கும் உத்தமனாம் மதார்சா

இவருடைய நூல்களுக்கு புரவிபாளையம் ஜமீன் சமஸ்தானத் தமிழ்ப் புலவர் சாற்றுக்கவி அளித்துள்ளார்.

“மதார்சா ராவுத்தர் மாரியம்மன் பேரால்

எதார்த்த விதமாக எண்ணி - பதார்த்தமது இன்னதெனத் தேரா எளியர் சுபம்அடைய சொன்னதமிழ்ப் பாவே சுகம்”

என்பது அவற்றில் ஒரு பாடலாகும்.

  • உதவி, முனைவர் நா. கணேசன், ஹூஸ்டன், அமெரிக்கா