உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

40. பாரதப் பார்த்தனைப் பாடிய பக்கீர் சாயபு

55

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் பக்கீர் சாயபு. பெரும்புலவர். பவானி - தளவாய்ப் பேட்டை தே.ர. அரங்கநாதக் கவிராயர் இயற்றிய “அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை' என்ற நூலுக்குச் சாற்றுக்கவி அளித்துள்ளார். பக்கீர் சாயபு தமிழாசிரியராகப் பணியாற்றியவர்.

பாடல்

“துதிக்கும்அருங் கவிப்புலவர் தமக்கொருசூ டாமணியாய்த் தோன்றி வையம்

மதிக்கும்உயர் அறிஞர்மதித் திடப்பார்த்தன் யாத்திரையின்

மாண்பை முல்லைப்

பதிக்குரிய பரமனடி பழிச்சுஅரங்கக் கவிராஜன்

பாக்கள் தோறும்

உதிக்கும்ஒவ்வொர் பதம்பரம பதம்எனநற் சுகந்தரவே உரைத்தான் மாதோ”

என்பது அவற்றில் ஒரு பாடலாகும்.