உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

39. கந்தன் சர்க்கரைக்கு வாள் பயிற்சி தந்த காதர் பாட்சா

63

தமிழ்நாட்டில் பல வேலூர்கள் உண்டு. அதனால் வட ஆர்க்காடு மாவட்டத்திலிருந்து பிரிந்து மாவட்டத் தலைநகராக விளங்கும் வேலூரை மக்கள் ராய வேலூர் (அரசர் உள்ள வேலூர்) என்று அழைப்பர்.

அங்கு 16ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் மிகப் புகழ்வாய்ந்த வாள்போர் வீரர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் காதர் பாட்சா என்பதாகும். வாள்போர் பயிற்சி அளிப்பதில் காதர் பாட்சா மிகவும் வல்லவர்.

ஈரோடு மாவட்டம், காங்கயம் வட்டம், பழைய கோட்டைப் பட்டக்காரர்கள் கொங்கு வேளாளர் சமூகத் தலைவர்கள் ஆவர். அப்போது 14ஆம் பட்டக்காரராக இருந்த கந்தன் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் வாள் பயிற்சி பெற, குறிப்பாக இரண்டு கைகளிலும் இரு வாள்களை வைத்துக் கொண்டு இரு கைகளாலும் சண்டை செய்யப் பழக வேண்டும் என்று விரும்பினார்.

காதர் பாட்சா பழைய கோட்டைக்கு வந்தார். பழைய கோட்டை அரண்மனையில் தங்கி 48 நாட்கள் பயிற்சி அளித்தார். பட்டக்காரர் இருகைகளிலும் வாள் எடுத்துச் சண்டை செய்யவும் வல்லமை பெற்றவர். பட்டக்காரர் மிக மகிழ்ந்து அவருக்குப் பயிற்சி அளித்த தொகையுடன் ஒரு குதிரையையும் இனாமாகக் கொடுத்தார். இந் நிகழ்ச்சியைப் பழையகோட்டை அரண்மனைப் சுவடிப் பாடல் விளக்குகிறது.

அட்டான நாடுபுகழ் கந்தன்சர் கரைஎன்னும் அதிபருக்கு

பட்டாணி முகமதிய ராயவேலூர் காதர்

பாட்சா என்போன்

எட்டாறு நாளினிலே இரண்டுகை யிலும்கத்தி

எடுத்து வீச

நெட்டாகப் பழக்கெஒரு குதிரைஒன்று இனாம்கொடுக்க நிலைபெற்றானே

  • பழையகோட்டை மரபுப் பாடல்கள் - எண் 37: பக்கம் 41