உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

38. வேளாள புராணத்தைப் புகழ்ந்த ஐயாவு ராவுத்தர்

இவர் ஈரோடு மாவட்டம் காங்கயத்தைச் சேர்ந்தவர். காங்கயம் அட்டாவதானி சேசாசலக் கவிராயரிடம் தமிழ் கற்றுப் பெரும்புலவராக விளங்கினார். இவர் செய்த தொழில் காளை, குதிரைகட்கு லாடம் அடிக்கும் வேலை! “லாடவேலை" ஐயாவு ராவுத்தர் என்றே இவர் பெயர் குறிக்கப்பட்டுள்ளது.

வீராட்.சி மங்கலம் கந்தசாமிக் கவிராயர் பாடிய வேளாள புராணத்தைக் கொங்கார்பாளையம் முத்துசாமிக் கவிராயர் ஈரோடு நித்திய கலியாண சுந்தரம் அச்சுக் கூடத்தில் 1907ஆம் ஆண்டு அச்சிட்டார். அந்நூலுக்கு ஐயாவு ராவுத்தர் சாற்றுக்கவிகள் அளித்துள்ளார். ஐயாவு ராவுத்தர் காங்கயம் அட்டாவதானி சேஷாசலக் கவிராயரிடம் தமிழ் கற்றவர்.

1) மணிதாங்கும் எழில் மாடம் அவரும்எழில் வீராட்சி மங்கலத்தில்

பிணிதாங்கும் அகல்ஞாலம் முழுதேத்த வந்ததிக

பாலவல்லோரின்

அணிதாங்கும் கவிகந்த சாமிஎனும் நாவலவன்

அன்பின் கீர்த்தி

கணிதாங்கும் குவளைமலர்க் காராளர் குலப்பெருமை கதிக்கவேண்டி

2) சொல்நோக்கும் பொருள்நோக்கும் தொடைநோக்கும் நடைநோக்கும் தொடராஇன்பத்து

என்நோக்கம் நன்னோக்காய் இசையும்இலக் காணமுறையில்

ஏயும் அன்பால்

முன்நோக்கும் புலவர்அவர் தம்நோக்கும் தன்நோக்காய்

மொழிய நாளும்

பன்னோக்கும் ஆர்ந்திடும்வே ளாளர்புரா ணத்தை இங்கு பணிந்து தந்தான்

என்பவை அவற்றில் இரு பாடல்களாகும்.