உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு7

ஏழு தலைமுறைப் பெயர்கள் அளிக்கப்பட்டிருப்பது வேறு எங்கும் இல்லாத செய்தியாகும். இந்துக்களின் அரசிகளையும், தெய்வப் பெண்களையும் நாச்சியார் என்று அழைப்பதுபோல (குந்தவை நாச்சியார், சூடிக்கொடுத்த நாச்சியார்) இஸ்லாமியப் பெண்களும் நாச்சியார் என்று அழைக்கப்பட்டுள்ளனர். அரசர்களிடம் பல்வேறு பட்டப் பெயர்களை இஸ்லாமியப் பெரியவர்கள் பலர் பெற்றுள்ளனர்.

நான்காவது பகுதியில் சிறப்புமிக்க பொதுச் செய்திகள் பல இடம் பெற்றுள்ளன. சில பதக்கங்களும், காயல்பட்டினத்தில் ‘அஸர்' என்ற மாலைநேரத் தொழுகை நேரத்தைக் குறிக்கும் கல்வெட்டுக்களும் முக்கியமானவை. (இவற்றை அன்புடன் வழங்கியவர் புதுக்கோட்டை டாக்டர் ஜெ. ராஜா முகம்மது அவர்கள்). அரசு ஆவணங்கள் பற்றியும், இஸ்லாமிய அரசர்கள் வெளியிட்ட நாணயங்களும் இறுதியாக இடம் பெற்றுள்ளன. ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோர் ஆட்சிக் காலத்தில் பாளையக்காரர் நிலை என்ற ஆய்வுக் கட்டுரையும் இடம் பெற்றுள்ளது.

மேற்கண்ட ஆவணங்கள் அனைத்திலும் ஒலிக்கின்ற ஒரே குரல் ‘மத நல்லிணக்கம்' என்பதேயாகும். இன்றுஇந்திய நாட்டுக்குத் தேவையான ஒருமைப்பாட்டு உணர்வுகளை மிக ஆழமாகவே இந்த ஆவணங்கள் நமக்குப் பாடம் புகட்டுகின்றன.

இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ள ஆவணங்களின் எண்ணிக்கை முடிந்த முடிவு அல்ல. இவை போன்று இன்னும் பல நூறு ஆவணங்கள் இருக்கக்கூடும். வரலாற்று ஆர்வலர்களும், ஆய்வாளர்களும் கள ஆய்வு மூலம் அவைகளையெல்லாம் தேடித் தொகுக்க இச்சிறு நூல் வழிகாட்டியாகவும், ஒரு தூண்டு கோலாகவும் இருக்கும் என்று நம்புகிறோம்.

இஸ்லாமியக் கல்லூரிகளின் வரலாற்றுத் துறையும் தமிழ்த் துறையும் இணைந்து இன்றியமையாத இப்பணியை மேற்கொள்ள லாம். இதற்கு வேண்டிய ஏற்பாடுகளைப் பெருமக்கள் செய்துதவ வேண்டும்.

இந்நூலுக்கு வேண்டிய சில ஆவணங்களைக் கொடுத்துதவிய இராமநாதபுரம் டாக்டர் எஸ். எம். கமால், புதுக்கோட்டை டாக்டர் ராஜா முகம்மது, சென்னை இராசகோபால்,

ஜெ.