உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 €

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

திருச்செங்கோடு எம். ஜெயக்குமார், தமிழ்நாடுஅரசு தொல்லியல் துறை, தமிழகத் தொல்லியல் கழகம் ஆகியவர்கட்கு என் மனமார்ந்த நன்றி உரியதாகுக.

என்னை இப்பணியில் ஊக்கப்படுத்திய கேப்டன் என்.ஏ. அமீர் அலி, கவிக்கோ அப்துல் ரகுமான், முனைவர் கவிஞர் தமிழன்பன், ஈரோடு டாக்டர் கே.எஸ். அமானுல்லா, தாராபுரம் எம்.ஜெய்லானி, ஈரோடு டாக்டர் வெ. ஜீவானந்தம், என்.ஹெச். முகம்மது இக்பால், ஈரோடு ஏ. அப்துல் ஜப்பார், ஈரோடு டாக்டர் அமரர் பி. சின்னைய்யன், ஈரோடு சாகுல் ஹமீது, ஈரோடு ஜி.முகம்மது தாஜ், பாளையங்கோட்டை செ. திவான், டாக்டர் முகம்மது நாசர், காரைக்கால் டாக்டர் சாயபு மரைக்காயர், காயல்பட்டினம், கீழக்கரை இஸ்லாமியப் பெருமக்கள் ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி உரியதாகுக.

மத நல்லிணக்கம் கூறும் இவ்வரலாற்று ஆவணங்கள் ஒவ்வொன்றும் கிடைக்கும் போதெல்லாம் நண்பர் ஈரோடு ஜமால் முகம்மது அவர்களிடம் கூறி மகிழ்வேன். மேலும்மேலும் என்னை இப்பணியில் ஈடுபடுத்தி, அவ்வப்போது ஏற்பட்ட ஐயங்களைப் போக்கி இப்பதிப்பு திருத்தம் அடையவும், செம்மையாகவும் உதவி, இப்பதிப்பு முயற்சியையும் உரிய முறையில் மேற்கொண்டு ஏற்பாடு செய்தவர்கள் அவர்களேயாவர். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி உரியதாகுக.

ஈரோடு வணிகர் ஹாஜி. கே.கே.எஸ்.கே. ரபீக் அவர்கள் தம் கல்வி அறக்கட்டளை மூலம் சமயப்பணி, சமூகப்பணி, கல்விப்பணி ஆகியவைகளைச் சீரும் சிறப்புமாகச் செய்பவர்கள். இந்த ஆவணங்கள் மீது மிகுந்த ஈடுபாடும் மற்றும் ஆர்வமும் கொண்டு என் இல்லம் வந்து இவற்றைப் பார்வையிட்டுப் பதிப்பதற்குத் தக்க உதவிகள் செய்வதாக அன்புடன் கூறினார்கள். அவர்கட்கு என் மனமார்ந்த நன்றி உரியதாகுக.

பதிப்புத் துறையில் சிறப்புற்று விளங்கி, பல இஸ்லாமிய மார்க்க நூல்களையும், வரலாறு, இலக்கிய நூல்களையும் வெளியிட்டு அனுபவம் பெற்ற சென்னை, நேஷனல் பப்ளிஷர்ஸ், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் உரிமையாளர் எஸ்.எஸ். ஷாஜகான் அவர்கள் பல அலுவல்கட்கிடையே ஈரோடு வந்து கையெழுத்துப் படியைப் பெற்றுச்சென்று குறுகிய காலத்தில் மிகச்சிறப்பாகப்