உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

79

தமிழ்க் கல்வெட்டைவிட மராத்தி மொழிக் கல்வெட்டு மிக விரிவாக உள்ளது. இங்கு மராத்திக் கல்வெட்டின் மொழிபெயர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. காலம் கி.பி. 1752.

மொழிபெயர்ப்பு

சுபம் ஸ்வஸ்தி ஸ்ரீ சாலிவாகன சகம் 1674 கலியுகாப்தம் 4853 ஆங்கிரச வருடம் மாசி மாதம் 15ஆம் தேதி சுக்கிலபட்சம் பவுர்ணமியன்று அசரத் மீரா சாகிப் அவர்களுடைய சன்னதிக்கு மேற்கு போசள குலதீப மகாராசா ராச ஸ்ரீ ஏகோசி அவர்கள் மகனான ஸ்ரீ துளசிராசா சாகிப் அவர்கள் வணங்கி அளித்த இடத்தில் பசுக்களையும் அந்தணர்களையும் காப்பாற்றுகின்ற வரான ஸ்ரீமத் சத்ரபதி மகாராசா ராசஸ்ரீ ஸ்ரீமந்த் பிரதாபசிம்ம மகாராசா சாகேப் அவர்கள் 11 நிலைகளையுடைய கோபுரத்தைத் தருமமாகக் கட்டி அளித்தார்.

சர்கேய் மானோசி செகதாப் அவர்கள் நாகூர் பந்தர் கார்பார் சுருணோசி போன்ஸ்லே மத்யஸ்தர் அப்துல் மாலிக் ஆகியோர் இந்த அறச்செயலை நிறைவேற்றி முடித்தனர்.

அசரத் சாகேப் அவர்களுடைய இடத்தில் பக்தி பூர்வமாக இந்த ஆவணம் சந்திரசூரியர் உள்ளவரை நடக்க வேண்டும் என்று எழுதிக் கொடுக்கப்பட்டது. வமிச பரம்பரையாக இந்தக் கொடையை வளர்த்துவர வேண்டும் என்ற எண்ணத்துடன் இக்கட்டிடம் கட்டப்பட்டது.

(Nationall Five Stat

21 JAN 2008

TIRUCHIRAPPY

SOUTH INDIA

  • தஞ்சை மராட்டியர் கல்வெட்டுகள், செ. இராசு: தமிழ்ப் பல்கலைக் கழக

வெளியீடு.