உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

> தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

45. அதிராம்பட்டினம் தர்காவிற்கு செவ்வப்ப நாயக்கர் கொடை

அதிராம்பட்டினத்தில் உள்ள தர்காவின் பெயர் ஹசரத் ஹாஜா அலாவுதீன் ஜிஸ்திய்யா வலியுல்லா சாகிப்தர்கா என்பதாகும். அந்தச் சிறப்புமிகும் தர்காவின் நுழைவாயிலின் மரநிலை சேதமடைந்து விழுந்தபோது செப்பேடு ஒன்று வெளிப்பட்டது. அச்செப்பேட்டை தர்கா அண்ணாவியர் கொண்டு வந்து கொடுக்க

இந்நூலாசிரியரால் படிக்கப்பட்டது.

தஞ்சை நாயக்க மரபின் முதல் மன்னர் செவ்வப்ப நாயக்கர். அவர் 29.12.1531ஆம் ஆண்டு அந்தத் தர்காவிற்கு அதிராமப் பட்டினம் கிராமம் முழுவதையும் சர்வ மானியமாகக் கொடுத்தார். அதாவது அதிராமப்பட்டினத்தின் சகலவிதமான வரிகளையும் அரசுக்குச் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் எல்லா வரியையும் ர்காவிற்குக் கொடுக்க வேண்டும்.

சாகிப் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு மகிழங்கோட்டை என்று பெயர். அங்கு கிணறு வெட்டிக் கொடுக்கப்பட்டது. ஆண்டு தோறும் தவறாமல் கந்தூரி நடத்த வேண்டும். தர்காவின் நிர்வாகிகள் சாகிப் அவர்களின் குமாரர்கட்கும், பேரன்மார்கட்கும் வழிவழியாகக் கந்தூரி கொடுத்துவர வேண்டும்.

கந்தூரிக்குத் தீங்கு செய்பவர்கள் ரௌரவாதி நரகத்தை அடைவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது. ‘ஸ்ரீராய' என்று அரசர் கையெழுத்திட்டுள்ளார். தொடக்கத்தில் இந்தச் செப்பேட்டில் ராமானுஜய நம" என்று எழுதப்பட்டுள்ளது. இது தஞ்சை நாயக்கரின் முதல் செப்பேடாகும். தஞ்சையில் அரசர் ஆகும் முன்பு விசய நகர ஆட்சியின்போது இக்கொடை அளிக்கப்பட்டிருக் கலாம். அதனால்தான் விசயநகர மன்னன் அச்சுதராயர் (1529-1542) பெயரோடு சேர்த்து அச்சுத செவ்வப்ப நாயக்கர் என்று செப்பேட்டில் எழுதப்பட்டுள்ளது.

"தமிழ்நாட்டு செப்பேடுகள்” பகுதி -2: பக் 57; ச.கிருஷ்ணமூர்த்தி