உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு 83

46. ஈசா பள்ளிவாசலுக்கு சேதுபதி மன்னர் கொடை *

ராமநாதபுரம் சேதுபதி அரசர்களில் குமாரமுத்து விசயரகுநாத சேதுபதிகாத்த தேவர் 14.1.1734 அன்று இராமநாதபுரம் நகரம் கோட்டை கடைவீதிப் பகுதியில் உள்ள ஈசா பள்ளிவாசலுக்கு வரும் ஆன்மிகப் பெருமக்களுக்கு அன்னம் வழங்குவதற்காகக் 'கிழவனேரி' என்ற ஊரைக் கொடையாகக் கொடுத்ததை இச்செப்பேடு தெரிவிக்கிறது. 'கிழவனேரி' முதுகுளத்தூர் வட்டத்தில் உள்ளது.

ஊரில் உள்ள நன்செய், புன்செய், மாவிடை, மரவிடை, திட்டு, திடல், ஏந்தல், பிறவிடை, குடி, படை, பள்ளு, பறை, கிணறு, மரம் முதலிய பலவும் பள்ளிவாசல் உடைமையாகும்.

புதுமையாக

இச்செப்பேட்டில் காப்புச் சொல் எழுதப்பட்டுள்ளது. “தமிழனாலும் நாலு வருணத்திலே உள்ள பேரும், இசுலாமானவர்களும் பரிபாலனம் பண்ணின பேர்கள் கெங்கைக் கரையிலேயும், சேதுவிலேயும் மக்கமதினத்திலேயும் புண்ணிய தலங்களிலேயும் அன்னதானம் சொன்னதானமும் வெகு குடும்ப பிரதிட்டையள் பண்ணின பலத்தை அடைவாராகவும்” என்பது காப்புப் பகுதியாகும். இக்கொடையைப் பெற்றுக் கொண்டவர் சர்தர்வேசலி மகன் சார்மூசா பாப்சா என்பவராவார்.

செப்பேடு

1. ஸ்வஸ்தி ஸ்ரீ சாலிவாகன சகாப்தம் 1656 இதன் மேல் செல்லா நின்ற ஆன

2.

3.

4.

5.

ந்த வருஷம் தை மாதம் 1ந்தேதி பௌர்ணமையும் சோம வாரமும் பூச நட்சத்திரமும் சௌமியாநா

மயோகமும் பாலவாகரணமும் கூடின புண்ணிய காலத்தில் தேவை

நகரா

திபன் சேதுமூலரட்சா துரந்தரன் இராமநாதசவாமி காரியதுரந்தரன் சிவபூஜா து

ரந்தரன் பரராஜ சேகரன் பரராஜ கெஜசிங்கம் இரவி குலசேகரன் இரவிமார்த்

6. தாண்டன் சொரிமுத்து வன்னியன் ஸ்வஸ்தி ஸ்ரீ மகாமண்டலேசுர