உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

47. ஏர்வாடி பள்ளிவாசலுக்கு சேதுபதி மன்னர் கொடை

சேதுபதி அரசர்களில் குமாரமுத்து விசயரகுனாத சேதுபதி காத்த தேவர் ஏர்வாடி பள்ளிவாசலுக்கு மாயாகுளம் என்ற ஊரைக் கொடையாக அளித்ததை இச்செப்பேடு கூறுகிறது. செப்பேடு அளித்த நாள் 1.11.1742 ஆகும்.

செப்பேட்டில் ஏர்வாடி-“ஏறுபாடு” என்று கூறப்பட்டுள்ளது. இக்கொடையைப் பள்ளிவாசல் சார்பாகப் பெற்றுக் கொண்டவர் முசாபர் நல்ல இபுறாகீம் என்பவராவார். இவ்வூரில் 50 கலம் நெல் விதைக் கூடிய நன்செய்யும், 4 கலத்து 3 கலம் விதைக்கக்கூடிய புன்செயும் அடங்கியது. இத்துடன் உத்தரகோச மங்கைக்கு அளிக்கப்பட்டிருந்த தட்டு 32 அரைக்காணி சதுர செவ்வல் மணக்காடும் பள்ளிவாசலுக்கு அளிக்கப்பட்டது. ஊரின் எல்லா வரிகளும் பள்ளிவாசலுக்கு அளிக்கப்பட்டன. உப்பளம், சந்தை பரிகளும் அளிக்கப்பட்டன.

"இந்தத் தர்மத்தைப் பரிபாலனம் செய்த பேர்கள் கோடிப் பிரதிஷ்டையும் கோடி சிவலிங்கப் பிரதிஷ்டையும் கோடி கன்னிகா தான பிரமப் பிரதிஷ்டையும், கோடி அன்னதான சொர்ணதான கோதானம் பண்ணின சுகிர்தத்தை அடைவாராகவும்' காப்புரை எழுதப்பட்டுள்ளது.

"இந்த தர்மத்துக்கு யாதாமொரு இசுலாமானவர்கள் பரிபாலனம் பண்ணியவர்கள் "கோடி அடிமைகொண்டு உரிமைக்கு விட்ட பயனும், கோடி கச்சுச் செய்த பலனும் அடைவராகவும்” எனக் காப்புரை புதுமையாக எழுதப்பட்டுள்ளது. அடிமை கொண்டு உரிமை விடல்:

முகமது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை அரபு பகுதியில் பிரச்சாரம் செய்யத் தொடங்கியபோது செய்த நற்பணிகளில் அடிமைகட்கு விடுதலை அளித்தது ஒன்றாகும். அடிமைகளை விலை கொடுத்து வாங்கியவர்களிடம் அவர்கள் கொடுத்த விலையைக் கொடுத்து அடிமைகளை விடுதலை செய்வித்து உரிமை அளித்த செயலை இச்செயல் குறிக்கிறது.

தமது பிரதம சீடர்களான அபுபக்கர் போன்றவர்களையும் பிறரையும் அவ்வாறே அடிமைகளை விடுவிக்கும் நற்பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.