பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் குறுநில வேந்தர் வான்மீகிபகவானிராமா என்று கூறியருளினனென்று யணத்துக் கேட்கப்படுதலாற் சீராமமூர்த்திக்கும் சீதாப் பிராட்டிக்கும் அநுமானுக்கும் அவ் விருமொழிவன்மையும் உண்டென்று நன்று தெளியலாம். அவர் திருவருள் பெருகிய இச்சேது நாட்டுக்கு அவ்விருமொழிவன்மையு முண்டாத லொருதலை. இச்சேதுநாட்டி னொருபகுதியாய நாட்டரசன்கோட்டையூர்ப்புறத்து நாடு வடகலைவேள்வி 102 நாடாதலையும் தெளிந்துகொள்க. இனிப் "பத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம்போற் கொண்டாடு, முத்தரகோசமங்கையூர்” என்று திருவாத வூரடிகளாற் றிருவாய்மலர்ந் தருளப்பெற்ற திருவுத்தர கோசமங்கைத்தலத்தைத் தன்கட்கொண்ட பெருஞ்சிறப் பானும் சேதுநாட்டின் கல்வி ஞானமேம்பாடே தெளிவிப்ப தாகும். வடக்கட் கைலையங்கிரியினிருந்த ஞான நூல் களும் உமாதேவியாரும் ஒருகாரணத்தான் இத்திருவுத்தர கோசமங்கைப்பாக்கத்துத் தோன்றியருளி, உமாதேவியார் முன் கேளாதனவெல்லாம் இத்தலத்தே சிவபிரான்பாற் கேட்டருளினாள் என்பது இத்தலபுராணத்தாற் றெரிந்தது. திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணத் தானுந் தெளியத்தகும். இஃதன்றி, அறிவாற் சிவனென்று சிறப்பிக்கப்பட்ட திருவாதவூரடிகள் நிவ்யஞானம்பெற்ற திருப்பெருந்துறை யும் இச்சேதுநாட்டதே யாயின் இதன்பெருமையை யாமே எடுத்துரைக்கவல்லேம்? இச்சேது நாட்டுள்ளாய திருவுத்தர கோசமங்கைத்தலத்தைத் தன்கட்கொண்ட தென்பாண்டி நாட்டையே “ஏழ்பொழிற்கு, நாதனமையாளுடையா னாடு” என்று திருவாதவூரடிகள் சிறப்பித்தவாற்றானும், உலகெலாமுடைய சிவபிரானைத் " சிவனே போற்றி" என்று இச்சேது புகழ்ந்தருளிய வற்றானும் இதன் நன்றுணரலாகும். "தென்னாடுடைய நாடுடைமையாற் ஞான மேம்பாடு