பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரா. இராகவய்யங்கார் இக்காரணங்களாலும், இதன் புண்ணிய விசேடங்களா லும் இச் சேதுநாடொன்றே நாடென்றுவழங்கப்படும் போலும்; இதனை, “ஊரெனப்படுவ துறையூர்” ‘பூவெ னப்படுவது பொறிவாழ்பூவே 'கோயிலென்டது 'கோன் றிருவரங்கம் 'கோயிலென்பதுகுளிர்பொழிற்றில்லை” என்பன போலக் கொள்க. நாட்டரசன்கோட்டை யென்பதுக் குச் சேதுநாட்டாசனுடைய அரண் என்பதே பொருளாத லானும்,புகார்ப்பட்டினம் விட்டுச் சேதுநாட்டுக் குடிபுக்க பண்டையோர்வழியினராகிய வணிக நன்மக்களெல்லாம் இன்றும் நாட்டுக்கோட்டையாரென்றே பெயர் சிறத்த லானும், திருமலைச்சேதுபதியைப் படிக்காசுப்புலவர் "நாட்டிற் சிறந்த திருமலையா" என்று விளித்துப் பாடுத லானும் இதனுண்மை ஊகிக்கப்படும். முன்பு புகார் நகரத்தராய்ப் பின்பு இப்புண்ணிய நாடுபுக்க வணிகநன் மக்கள் நாட்டார் என்று பெயர்சிறந்த சேதுநாட்டாரி னின்று தம்மை வேறுபிரித்துணரவே நகரத்தார் என்று வழக்குப்பெற்றாராவரென் றுன்னுதல்கூடும். 103 இங்ஙனம் புண்ணியமும் ஞானமுந் தழைத்த இச் சேது நாடாட்சி பெற்ற பாக்கியவான்களாகிய சேதுபதிகளை வைணவரெல்லாம் "திருவுடை மன்னரைக் காணிற் றிருமான கண்டேனே யென்னும்” என்னுமுறையாற் சீராமமூர்த்தியாகவும், சைவரெல்லாம் சீராமநாதமூர்த்தி யாகவும் உபசரித்து உசித நாட்டுத் தொன்றுதொட்ட மரபாம். இதனை, மரியாதைசெய்தலும் இந் ‘“சேதுபதி யென்றுநா சென்மமெடுத் தாய்கமல மாது பதிக் குன்பேர் வாய்க்குமா—பூதலத்தி னீயே 'ரகுராம னின்னையே பெற்றெடுத்த தாயே யருட்கோ சலை’” என வழங்கும் பழைய வெண்பாவானும், "ஆதிபதி யானமண்ட லாதிபதி வம்சபதி. யரசர்க்கென்று