பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 தமிழகக் குறுநில வேந்தர் நீதிபதி சத்ரபதி சமஸ்தானபதி விஜயநிறைந் மாதுபதி துரகபதி கஜபதி நராதிபதி தேநிற்கு வளர்தென் றேவைச் சேதுபதி தரிசனமே ராமலிங்க தரிசனமாச் செப்பலாமே என்று வழங்கும் பழைய விருத்தத்தானும் நன்கறிந்து கொள்க. செய்தி, இவருடைய புண்ணியநாடு தமிழிற் பெரிய ஞானி கட்கு மிடமாய தென்பது, சைவத்திற் சிறந்த ஞானயோகி யாகிய ஸ்ரீ தாயுமானவர் நெடுநாள் தங்கிச் சமாதியடைந் தருளிய முகவையும், விசதவாக்சிகாமணியாய் வைஷ்ண வாசாரியராய்த் தெய்வமும் அழைத்துப்பேசுந் தூயஞான மும் உடைய மணவாளமாமுனிவர் வளர்ந்து சிறந்த சிக்கற் கடாரமும் தன்பாற்ரெகண்டுவிளங்குவதனாற் பலரும் அறியத்தக்கது. இவ்விரண்டு ஞானாசாரியர்களும் பாடியருளிய தமிழ்ப்பாடல்களின் பெருமை கற்றாரறிந்ததே. மணவாளமாமுனிவரைத் தெய்வம் அழைத்துப்பேசியருளிய “நாமார் பெரிய திரு மண்டபமார் நம்பெருமாள் தாமாக வென்னைத் தனித்தழைத்து-நீமாறன் செந்தமிழ் வேதத்தின் செழும்பொருளை நாளுமிங்கே வந்துரையென் லேவுவதே வாய்ந்து என்று அவர் ஈடுபட் டோதியருளிய வெண்பாவா னறிந் தது. இவர் திருவாலியிற் றிருமங்கைமன்னனைச் சேவிக்கப் புக்கபோது பாடியருளிய பாடல்:- ஈதோ திருவர சீதோ மணங்கொல்லை யீதோ திருவாலி யென்னுமூ-ரீதோதான்