பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

128. ருரை. தமிழகக் குறுநில வேந்தர் தஞ்சையரசனைப் போர்தொலைத்துச் சிறந்த தளவாய் - தாமோதரம்பிள்ளையவர்கள் வேள்விக்கோவை கொண்ட னர். இவ்வில்லேருழவர் தொல்குடி சிறக்கவந்த சொல்லேருழவரும், இராச்சியதந்திர மகாநிபுணரென அறிஞர் பலரானும் புகழ்ந்து கொண்டாடப்பட்ட பேரறி வாளரும் ஆகிய ஸ்ரீமாந் - பொன்னுச்சாமித்தேவரவர்களது செந்தமிழ் வண்மை நந்தமிழ்நாடெல்லாம் நன்கறிந்ததே. இவர்கள் நல்லுதவியால் வெளிவந்த செந்தமிழ் நூல்கள், திருச்சிற்றம்பலக்கோவையாருரை, திருவள்ளுவ நன்னூல்விருத்தியுரை இலக்கணக்கொத்துரை, தொல்காப்பியப் பாயிரவிருத்தி : முதற்சூத்திர விருத்தி, தமிழ்ப்பிரயோகவிவேகவுரை, தருக்கசங்கிரகவுரை, தனிப்பாடற்றிரட்டு, மருத்துநூல் எனப்பலவாம். இப்பிரபு சிகாமணிகளது அருமைச்சோதரராகிய ஸ்ரீமாந் -முத்து ராமலிங்கசேதுபதி யவர்களது ஸங்கீதஸாகித்தியவன்மை இந்நாடெல்லாம் நன்று தெரிந்ததேயாம். அவர்க ளியற்றிய நூல்கள் வள்ளிமணமாலை, முருகரநுபூதி, மும்மொழிமாலை, பிரும்மகைவல்யம், பாலபோதம், பிரபாகரமாலை, காபகப்பிரியா, ரஸிகரஞ்சனம் பலவாம். எனப் இத்தகைச்சேதுபதிகள் மரபிற்கோர் திலகம்போல் விளங்கிப் பலகலையறிவானும் பிரசங்கவலியானும் பெருங்கொடையானும் நிலவுபுகழ்பரப்பி, நந்தமிழ்நாடு புலம்பச் சமீபகாலத்துத் தேகவியோகமடைந்த ஸ்ரீமான்- பாஸ்கரசேதுபதி மன்னரது செந்தமிழறிவும் செந்தமிழபி மானமும் யாமெல்லாம் கண்கூடாகக்கண்டனவே. அமிழ் தினுமினிய தமிழ்முழுதோர்ந்து இமிழ்கடல் வரைப்பெலாம் அத்தமிழ்ச்சுவைதெருட்டவிழைந்து செந்தமிழ்ச்சங்க மொன்று சீர்பெறநிறுவி அதன்வளர்ச்சிக்கண்ணே தண்ணுங்கருத்தும் உடையராய்ச் சிறந்தநஞ்செந்தமிழ் வள்ளலாகிய பாலவனத்தம் ஜமீந்தார் ஸ்ரீமான்-பாண்டித் துரைத் தேவரவர்களும் இத்தொல்குடிப்பிறப்பினராவர். கூறிய இவையெலாம் இச்சேதுபதிகட்கும் தமிழிற்குமுள்ள பொருத்தம் விளக்குவனவாம். இத்துணையுங் வாற்றான் இச்சேதுபதிகளது தொன்மையியல்பும், செந்தமிழ்வண்மையும் ஒருவாறறியத்தக்கன. முற்றும்.