பக்கம்:தமிழக குறுநில வேந்தர்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

38 தமிழகக் குறுநில வேந்தர் "வேளாண்வாயில்" (பொருநராறு 75) உபகரிப்பதற்கு வழி என்றார் நச்சினார்கினியர்: இவற்றால் இச்சொற்குப் பிறர் விருப்பத்தை ஆளுந்தன்மை என நல்லுரைகாரர் கொள்ளாது உபகாரியா ந் தன்மை உபகாரம் எனப் பொருள் கொள்ளுதலே காணலாம். இதனால் வேள் என்பது உபகாரிக்குப் பரியாயநாமா ஆதல் தெரிக. வேளாளனென்பான் விருந்திருக்க வுண்ணாதான்” என வருவது காண்க. வேள் குலத்திற்கே சிறந்த இப்பண்பு, அறம் பூண்டு பாரியும் பரிசிலரிரப்பின் வாரேன் என்னாள் அவர் வரை அன்னே” (புறம் 108) என வருதலான் அறியலாம். கபிலர் பாடிய 'உவரா ஈகைத் துவரையாண்டு நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிர்' (புறம் 201) என்புழி ஈகையைச் சேய்மைக்கண உள்ள வேளிர்க்கு ஏற்றாது, அடுத்துக் கிடந்த துவரைக்கேற்றிக் கூறினும் இக்கச்மீர நிலத்திற்கு நன்கு இயையும். உவரா ஈகைத் துவரை என்பது தன்கண் வாழ்வார் வெறுக்காத ஈகைப் பற்றிலுள்ள துவரை என்றவாறாம். ஈகை என்பது வராஹ மூலத்வாரத்திற்கு அணித்தாய் விதஸ்தா நதி (வேள் யாறு) யை அடுத்துள்ள யக்ஷத்வாரா என்னும் மலைப்பிளவின் அடையாளங் குறித்தற்குரிய பெயரென நினையலாம். இந்நாடு நாகர்க்கு முன்னர் யக்ஷர் இருந்ததென்பது ராஜ தரங்கினி வல்லார் கண்டது (Steine R.T, பக்.184). யக்ஷ தேசம் யட்சிகா எனப்பட்டு, அதுவே ஈக், ஈகை என்ப தாகச் சிதைவாய் வழங்கலாயிற்று. இக்காச்மீரத்து ஸ்ரீநகர்ப்புறத்து (ஈக்காம் (yeghgam) என்ற ஊரும். ஈக் (yeeh) என்ற நாடும் உள்ள உண்மை நோக்கிக் கொள்க. கச்மீரம், காசிபர் நகரைக் குடியேற்றுதற்கு முன்னே பிசாசரால் நிறையப் பட்டிருந்ததென்பர். "கச்மீர மக்கட்குப் பேய்க் குலத்தவர் தொடர்பொழியப் பார்வதியை நதியாக ஒழுகும்படி காசிபர் வேண்டினர்” (Steine. R.T, II, 411) என்ற வரலாறுண்மையால் இஃதறி