89
நிலையைச் சோதிக்க அவர்களை நெருப்பில் இறங்கச் செய்துள்ளதைக் கதைகள் வாயிலாக அறியலாம். பாவப் பிடியால் கீழ் குலத்திலுதித்ததாக நம்பப்பட்ட நந்தனாரைத் தூய்மைப்படுத்தி மேற்குலத்தினர்குரிய உரிமைகளைப் பெற்றிடச் செய்ய நெருப்புக் குளிக்கச் செய்த நிகழ்ச்சியையும் இங்கு பொருத்திக் காணலாம். வினை மிஞ்சிய நகரைத் தீக்கிரையாக்கியச் செய்தியைச் சிலப்பதிகாரம் விளக்கிக் கூறும். இவற்றை ஒப்ப நோக்கினால் ஒரு சமுதாய. நம்பிக்கை புலனாகும். தூய்மையடைய தீமிதிக்க வேண்டும் என்பது சமுதாயக் கோட்பாடாக இருந்திருக்கிறது.
கோயில் திருவிழாக்களில் தீமிதிக்கும் நிகழ்ச்சி, மிகச் சிறப்பாக நடைபெறுவவைத் தமிழ் நாட்டில் பல இடங்களில் இன்றும் காணலாம். வட ஆர்க்காடு மாவட்டம் ரெட்டிக் குப்பம் ஊரிலுள்ள திரௌபதியம்மன் கோவிலில் சித்திரை வைகாசி மாதங்களில் நடக்கும் விழாவில் 18 நாட்கள் பாரதம் வாசிப்பார்கள். இறுதி நாளன்று துரியோதனனைக் கொண்டு பாண்டவர்களுக்குப் பட்டம் கட்டி மகிழ்வர். இரவு தீமிதி
விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.)
கோயிலின் பக்கத்தில் தீக்குண்டம் அழகாகக் கட்டப் பட்டுள்ளது. அது இரு பகுதிகளாக அமைந்து உள்ளது. ஒரு பகுதி யில் நெருப்பும் இன்னொரு பகுதியில் நீரும் இருக்கும், குழல் முடிக்காத திரௌபதியம்மனின் உருவத்தை நெருப்புக் குண்டத்தின் பக்கத்தில் வைத்திருப்பர். தெய்வமேறிய சிலர் ஆடியவாறு நெருப்புக்குள் இறங்கி நடந்தவாறு நீர்நிரம்பிய பகுதிக்குள் வந்து குளித்து விட்டு வெளியேறுவர். அப்பொழுது கூடியிருக்கும் மக்கள் அனைவரும் ஒரே குரலில் 'ராதா ரமண கோவிந்தம், கோவிந்தா! கோவிந்தா!' என்று முழங்குவர். அந்த ஒலியால் அமையும் பக்திக் கதகதப்பில் தீமிதிச் சடங்கு புனிதமாக நடைபெறும் இதன் மூலம் செய்வினை தீர்ந்து தூய்மையடைந்து விட்டதாக நம்புகின்றனர். பின்னர் அம்மனைக் குழல் முடித்த அலங்காரத்துடன் ஆலயத்துக்குள் எடுத்துச் சென்று பூசனைகள் செய்து வணங்குவர். ஆண்டு தோறும் இவ்வாறு தீக்குளிக்கும் விழா நடக்கிறது.
இதே போன்று தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள பாதிரிக்குப்பம் ஊரிலும் திரௌபதியம்மன் கோவில் விழாவின் போது தீமிதித்தல் நடைபெறுவதாக அறியலாம். செங்கல்பட்டு