90
மாவட்டத்தைச் சேர்ந்த ஆலந்தூரிலும் தீமிதி விழா மிகச் சிறப்பாக நடந்து வந்துள்ளது. நெருப்புக் குண்டம் உயரமாக வும் உறுதியாகவும் கட்டப் பெற்றுள்ளது. மக்கள் அதனைப் புனித இடமாகக் கருதுகின்றனர். வடக்கிலுள்ள மாவட்டங் களில் திரௌபதியம்மன் திருவிழாவில் நடைபெறும் தீமிதிச் சடங்கு தென் மாவட்டங்களில் மாரியம்மன் கோயில் விழாக் களில் நடக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஸ்ரீ வில்லிபுத்தூரில் தீமிதிக்கும் சடங்கு ஆண்டு தோறும் பங்குனி சித்திரை மாதங்களில் அங்குள்ள மாரியம்மன் கோயிலில் நடந்து வருகிறது. நெருப்புக் குண்டத்தை அங்குள்ள மக்கள் சிறப்பாகப் 'பூக்குழி' என்று அழைக்கிறார்கள். நெருப்பில் நடப்பதற்கு முன் பக்தர்கள் பலவித நோன்புகள் செய்து ஒரு மஞ்சள் கயிற்றைக் கையில் கட்ட வேண்டும். அவர்கள் கோயிலுக்கு வரும் போது உறவினர்களால் மஞ்சள் நீர் ஊற்றப் பெற்று புனிதமாக்கப்படுவர். கோயிலுக்கு முன்னுள்ள பூக்குழியில் நெருப்புத் துண்டுகள் இருக்கும் அதன் மேல் அவர் கள் நடந்து செல்வர். அதை மிகவும் புனிதமாக அனை வரும் கருதிக் காண்பர்.
தீமையின் பலனைத் துன்பப் பட்டே துடைக்க வேண்டும். என்ற கருத்து இந்தச் சடங்கின் மூலம் நிறுவப்படுவதை உணர வேண்டும். பாவிகள் செல்லும் நரகத்தில் அவர்களை எதிர்த்துக் கரைக்கும் நெருப்பு இருப்பதாக மனிதன் கற்பனை செய்வதையும் இந்தக் கருத்தையும் ஒப்பிட்டுக் காணலாம். தீமிதிக்கும் சடங்கில் கலந்து கொள்வோர் பலவிதக் கட்டுப்பாடுகளுடன் நோன்பு இருக்க வேண்டும். நம்பிக்கையும் மனவுறுதியும் தீமிதித்தலுக்கு அடிப்படைக் காரணங்களாக உள்ளன.
பங்குனி உத்திர நாளில் குன்றக்குடியில் தீமிதித்து இறை வாழ்த்தும் வழக்கம் உள்ளது. காவடி சுமந்து வரும் பக்தர்கள் குடும்பம் குடும்பமாகத் தீயை மிதித்துக் கொண்டு கோயிலுக்குச் செல்வர். நோன்பு முறைப்படி சிறுவர்களும் இறையை நாடி இன்முகத்துடன் அவ்வாறு செய்வது அவர்களுடை இறைப் பற்றைக் காட்டும். அடுத்தவர்களுக்கு இது வியப்பாகவே
இருக்கும்.