தாலியறுப்பு விழா
91
தென்னார்க்காடு மாவட்டம் கொத்தட்டை என்ற ஊரில் கோயில் கொண்டுள்ள கூத்தாண்டவரை வழி படுவதாகத் தாலியறுப்பு விழா நடைபெறுகிறது இந்தத் தெய்வத்தை அரவான் என்றும் கூறுகின்றனர். இவரைப் பெரும்பாலும் திருமணமாகதவர்களே வழிபடச் செல்வர். அலிகள் தேவர் களுக்கு உரிய மனைவியர் என்று நம்பி அவர்களும் கூத்தாண்ட வரை வணங்கச் செல்வார்கள்.
கோயில்
கடற்கரையை ஒட்டிய இடத்தில் உள்ளது பௌர்ணமி நாட்களில் மணமாகாத ஆண்கள் பெண்கள்' போன்று ஆடையணிந்து கையில் வளையணிந்து கோயிலுக்குச் செல்வர் கூத்தாண்டவர் திருமணமாகாத தெய்வர். இவர்கள் அந்தத் தெய்வத்தை மணந்து கொண்டதற்கு அறிகுறியாகத் தாலி கட்டிக் கொள்வார்கள் இரவு 12 மணிக்குக்
கூத்தாண்டவர் இறந்து விடுவதாக ஒரு நிகழ்ச்சி நடக்கும். உடனே தாலி கட்டிய அனைவரும் அதனை அறுத்தெறிவர். கையிலுள்ள வளையலை உடைப்பர். விதவையராகத் தாங்கள் ஆகி விட்டதாகக் கருதிக் கூத்தாண்டவரின் இறப்புக்காக வருந்தி மாரடித்து அழுவார்கள். இத்தகைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் தங்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும் என்று மக்கள் நம்புகின்றனர். வழிபாடுகள் நம்பிக்கையின் காரண மாகப் பலவித வினோதங்களுடன் நடப்பதைத் தாலியறுப்புவிழா போன்றவற்றால் அறியலாம் இது பற்றிய விளக்கத்தைக் காண்பது நலம்.
நாயகனான
மகாபாரத்தில் இடம் பெறும் ம் களப்பலி அரவானையே கூந்தாண்டவராக கொத்தட்டை ஊரில் வழிபடுகின்றனர். இவ்வூர் கடலூருக்கு அண்மையில் உள்ளது. அரவான் களப்பலியில் இறக்கப் போவதால் தனக்கு உடனே திருமணம் செய்து விடவேண்டும் என்று கண்ணனிடம் தன் ஆவலைக் கூறுகிறான். அதைக் கேட்டதும் கண்ணன் மோகினி உருவமெடுத்து அந்த இடத்திலேயே அரவானை மணந்து கொள்கிறார். அடுத்து வரும் அமாவசை நாளில் களப்பலி செய்யப்பட்டு இறந்து விடுகிறான். அலிகளும், வேண்டுதல் செய்வோரும் தாங்கள் கட்டியுள்ள தாலிகளை அறித்து எறிந்து விடுகிறார்கள். அரவானின் சாவுக்காக மாரடித்து அழுகிறார்கள். பின்னர் கடலில் குளித்துத் தங்கள் தீவினை தொலைந்ததாக நம்பி வீடுகளுக்குத் திரும்புகிறார்கள்.