92
அவர்கள் மாரடித்து அழும்பாடல் சுவையாக இருக்கும். தங்கள் கணவன் இறந்ததாக நினைத்தே ஒப்பாரி வைப்பர்.
'ஆலின் நீ வருவேன்னு ராசா
இந்த ஆசைப் பெண்ணு காத்திருந்தேன். வீரன் நீ வருவேன்னு என்ராசா விடியுமுட்டும் காத்திருந்தேன்.
பஞ்சி மெத்த போட்டு வச்சேன் என்ராசா பாய் போட்டு காத்திருந்தேன்.
ஆசை வச்சி மாலையிட்டேன் என்ராசா ஆளாயி காத்திருந்தேன்.
கொண்டையிலே பூமுடிச்சேன் என்ராசா கைகளுக்கு வளையலிட்டேன்
எங்கொண்டப்பூ வாடலியே என்ராசா
கைவளையும் நோகல்லியே !
இவ்வாறு மாரடித்து அழுவதும் கீழே விழுந்து புரழ்வதும் அங்கு காணும் காட்சிகள். இழவு எடுத்தல். எட்டாம் நாள் துக்கம் கொண்டாடல் ஆகியவையும் உண்டு.
பதினெட்டு நாட்கள் நடத்த பாரத போரில் களப்பலியான அரவான் வீரப்போர் செய்ததாகக் கதை கூறும். ஆகையினால் அவன் 'கூற்றை ஆண்டவன்' என்று போற்றப் படுகிறான். கூற்றையாண்டவன் என்பதே கூத்தாண்டவராக மாறியுள்ளது. அவருக்காக நடத்தப் படும் விழாவே தாலியறுப்புக் கலையாக வளர்ந்துள்ளது. நாட்டுப்புற மக்கள் தொன்மக் கதைகளை நம்பியுள்ளனர். உணர்ச்சியுடன் அவற்றை உண்மை தோன்ற நடித்தனர். அவை தங்களுடைய வாழ்க்கையில் நன்மைகளைத் தரும் ஆற்றலுடையவை என்று நம்பினர்.
வரவழைப்புப் பாட்டு
வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள சோளிங்கர், வேலூர் போன்ற இடங்களில் தெய்வங்களை வழிபட்டு அவர்களை வர வழைத்துத் தங்களுக்கு வேண்டியவற்றை அவர்களிடமிருந்து அருளாகப் பெற வேண்டும் என்ற விருப்பத்தில் வரவழைப்புப் பாட்டு பாடப் பெறுகிறது. தெய்வ ஒப்புதல் இல்லாமல் அங்குள்ள நாட்டுப் புற மக்கள் காது குத்துவதோ மொட்டை அடிப்பதோ இல்லை. தெய்வங்களை மனிதன் மேல் வரச் செய்