உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




103

பிழைப்பதற்காகவே இவ்வாறு

தலையாட்டி மாடுகளை

அழைத்து வருகிறார்கள். இதில் கலைத்தன்மை ஏதும் இருப்பதாகத் தோன்றவில்லை.

லியாட்டம்

அச்சமூட்டும் பூதவுருவங்களைத் தாங்கி ஆடும் வழக்கமும் தமிழ் நாட்டில் உள்ளது. தீய தேவதைகளைப் பெருந் தோற்றங் களாகக் கற்பனை செய்து கதைகளை உருவாக்கியுள்ளனர். கற்பனை செய்ததை உருவமாகச் செய்து ஆடுகின்றனர். முகமூடிகள் மூலமும் அச்சம் தரும் பூதவுருவைக் காட்டியுள்ளனர். பூதவுருவங்களில் கொடிய ஆவிகளையும் பேய்களையும் கற்பனை செய்துள்ளதாகவும் கருதலாம். புராணக் கதைகளில் பூதவுருவ முடைய கொடிய பாத்திரங்கள் இடம் பெற்றுள்ளதைக் காணலாம். அவற்றை உருவாக்கிக் காட்ட மரங்களினால் அச்சுத் தோற்றமுடைய மிகப் பெரிய முகமூடிகளைச் செய்கின்றனர் அவற்றின் பற்கள் நீண்டும் மூக்கு அகன்று மிக நீளமாகவும் செதுக்கப் பட்டிருக்கும் புள்ளிகளிட்டு அவற்றைக் கோரமாக்கிக் காட்டுவதும் உண்டு. அச்ச உணர்வை மிகுதிப் படுத்துவதே அத்தகைய உருவங்களின் முக்கிய நோக்கம்.

தென் மாவட்டங்களில் அம்மன் கொடை விழாக்கள் நடக்கும் போது ஆலியாட்டம் வெகு விமரிசையாக நடக்கும். மூங்கில் கீற்றுக்களை இணைத்து ஒரு பெரிய மனித உருவம் செய்வர். வைகோலைப் பரப்பி அதற்கு மேல் ஆடை அணிவர். நீண்ட அங்கிபோன்று ஆடையிருக்கும். தலை தனியாகச் செய்யப் பெற்று அந்த உருவில் பொருத்தப்படும். ஆலியின் உட்பசதி ஒரு மனிதன் நிற்கும் அளவுக்குக் கூடாக இருக்கும். அதன் மார்புப் பகுதியில் இரண்டு துளைகள் இருக்கும். அவற்றின் வழியாக ஆலி சுமப்பவன் வெளியே பார்க்க முடியும்.

ஒரு மனிதன் அதைத் தூக்கி ஆடுவான். அதன் பருவ உருவமும் கோர முகமும் அச்சமூட்டும் மூன்று அல்லது நான்கு ஆலிகள் கூட்டாக ஆடும். அவற்றில் ஒன்றைக் குறவன் என்று கூறுவர். இன்னொன்று பெண்ணுருவாக இருக்கும். அது குறத்தி என்று அழைக்கப்படும். கொட்டு அடிப்பது போலவும் குழல் ஊதுவது போலவும் மற்ற ஆலிகள் செய்யப்பட்டிருக்கும். ஆண் ஆலி கையை அகல விரித்து ஆடவும் பெண் ஆலி அதைத் தொடர்ந்து பின்னால் ஆடும். இரண்டும் ஊழை ட்டு அலறும். சிறுவர் அதைக் கேட்டு அஞ்சி ஓடுவர்.