உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




104

நாதசுவரம் அல்லது நையாண்டி மேளம் இசைக்கப்படும் அம்மன் தெருவலம் வரும் போது கூடவே ஆலிகள் தெருவில் ஆடிக்கொண்டு வரும். சில சந்திகளில் நின்று சுற்றிச் சுற்றி ஆடுவர். அச்சம் தரும் ஆலி ஆட்டத்தை நாட்டுப்புற மக்கள் விரும்பிக் காண்பர். இத்தகைய கோரமான உருவமைப்புடைய ஆடல்கள் இந்தியாவில் சில பகுதிகளில் நடப்பதாகக் கூறப் படுகிறது. அருணாசலப் பிரதேசம் இவ்வாறான ஆட்டம் நடத்துவதில் புகழ் பெற்றுள்ளது.

வேதாள ஆட்டம்

ஆடல்

மரத்தினாலான வேதாளத்தின் கோர முகமுடியை ஒருவர் தன்னுடைய முகத்தை மறைக்கும் படி கட்டிக்கொண்டு ஆடுவார். ஆடுவோருடைய கையில் ஒரு தீச்சட்டி இருக்கும். அது கனந்து எரியும். முகமூடியில் கண்கள் ஓட்டையாக இருப்பது ஆடுபவரின் பார்வைக்கு உதவும். இந்த அமைதியாக ஒரே தாளகதியில் நடப்பதைத் தான் முடிகிறது. வேதாள முகத்தில் கோரைப் பல்லும் நீண்டு அச்சவுணர்வை ஏற்படுத்தும். ஒரு கையில் குழையை வைத்துச் சட்டியிலுள்ள நெருப்பை வீசி பெருக்கிய வாறு ஆடுவர்.

காண

நாக்கும் வேப்பங்

வேதாளத்தைச் கற்றிச் சூழ்ந்து நாலைந்து சிறுவர்கள் ஆடுவார்கள் அவர்கள் முகத்தில் செம்புள்ளி கரும்புள்ளி குத்தி யிருக்கும். அரையைச் சுற்றி வேப்பங் குழை கட்டியிருப்பர் கையிலும் குழை வைத்துக் சுழற்றிச் சுழற்றி ஆடுவார்கள். அவர்களைக் 'கொள்ளியாப்பை' என்று நாட்டுப்புற மக்கள் கொச்சையாகக் கூறுவர் உண்மையில் அந்த சொல் கொள்ளி வாய்ப் பேய் என்பதின் மருவாக உள்ளது.

திருநெல்வேலி, குமரி மாவட்டங்களில் நடக்கும் கொடை விழாக்களில் வேதாள ஆட்டம் மிகுதியாக நடைபெறும். ஆலியாட்டத்தைத் தொடர்ந்தே இது நடக்கும். வேதாள ஆட்டத்துக்கு ஆடம்பரமோ ஆரவாரமோ கிடையாது. கொடுந் தெய்வங்களின் குறியீடாக வேதாள ஆட்டம் நடை பெறுவதாகக் கருதலாம். பருமனாகவும் குட்டையாகவும் இருக்கும் மனிதனையே இந்த ஆட்டம் ஆடத் தெரிந்தெடுக் கின்றனர். நாட்டுப்புற மக்கள் நல்லதையும் கெட்டதையும்