105
ஆட்டம்
உருவகித்துக் காணும் இயல்புடையவர். வேதாள கொடுந்தன்மையின் குறியீடாகவே நடத்தப் படுகிறது. அம்மனின் துணைப் படையாக வேதாளங்களைக் கருது
கின்றனர். அவர் ஊர்வலம் வரும் போதுவ பூதகணக்கள்,
வேதாளங்கள், பேய்கள் ஆகியவை துணையாக வருவதாகக் கூறப்படும். இந்தக்கருத்தைக் கொண்டே இத்தகைய கோரமான ஆடல்கள் நடத்தப் படுவதாகக் கூறலாம்.
வர்ணக் கோடாங்கி ஆட்டம்
கோடாங்கி
அம்மன் கோயிலின் தெருக்களில் வர்ணக் ஆட்டம் நடைபெறுகிறது. இதை ஆடுவதற்காக் குறிப்பிட்ட இன மக்கள் உள்ளனர். வழிபாட்டுப் பாடல்களைப் பாடி உடுக்கு அடிப்பர். இடையிடையே ஊராருக்குக் குறியும் சொல்வர் இதைக் கேட்பதற்காகவே பலர் அவர்களைச் சுற்றிக் கூடுவர். இரண்டு அல்லது மூன்றுபேர் வர்ணக் கோடாங்கி ஆட்டம் ஆடுவர். நெல்லை மாவட்டத்தில் இந்த ஆடலுக்கு இன்றும் நல்ல மதிப்பு உள்ளது. அவர்களுடைய ஆடையணி களும் விநோதமாக இருக்கும். வழிபாட்டுப் கோடாங்கி இசைமுறையில் பாடுவதற்காகவே மக்கள் அழைப்பர்.
பாடலைக்
இவர்களை
நா-8