உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




114

O

நெல்லை, குமரி மாவட்டங்களில் நாட்டுப்புறத் தெய்வங்கள் பெரும்பாலும் ஒன்றாகவே உள்ளன. தெய்வக் கதைகளும் இரண்டு மாவட்டங்களிலும் இணைந்து நடந்ததாகவே உள்ளன. தனித்தனி மாவட்ட இயல்புடைய தய்வங்களும் இருக்கின்றன. நெருக்கமான சமுதாயத் தொடர்பாலும் பக்கத்திலிருக்கும் நெருக்கத்தாலும் இவ்வாறு. இரண்டு மாவட்டங்களிலும் நாட்டுப்புற இயல்புகள் பெரும்பாலும் ஒன்றாகவே அமைந்திருக்கின்றன.

சுடலைமாடன் ஆண் தெய்வங்களில் மிகவும் முக்கியமான வனாகக் கருதப்படுகிறான். கொடூரமான இயல்புகளும் குரூர மான இயல்புகளுமுடைய இந்தத் தெய்வத்தின் செயல்களைக் கதைப் பாடல்களில் கேட்டு அஞ்சிப் பணிவர். அனைத்து ஊர் களிலும் அவனுக்குக் கோயில்கள் உண்டு. இந்தத் தெய்வமேறி ஆடுவோர் உடலை வளைத்து முறித்து ஆடுவது அஞ்சும் தரமாக இருக்கும். அரையில் சல்லடமும், தலையில் பல வண்ணத் தொப்பியும். கையில் அரிவாளும் கொண்டு ஆடுவர். ஈட்டி போன்ற அமைப்புடன் ஐந்து மணிகள் தொங்கும். ஐந்து மணி வல்லயமும், ஒரு பருத்த தடியும் எடுத்து ஆடுவதையும் காண லாம். தீப்பந்தம் ஒன்றை கையில் பிடித்தோ, அரையில் செருகியோ ஆடுவர். சிலர் பல பந்தங்களைப் பிடித்து ஆடுவதும் உண்டு. ஆயுதங்களைக் கொண்டு தலையில் அடிப்பதும் உடம்பில் வெட்டுவதும் அவர்களுடைய ஆடலின் ஊடே நடை பெறும் செயல்கள். பொங்கல் பானையில் கையிடுவதும் குளிப் பதும் வியப்பான நிகழ்ச்சிகள். ஆடிக்கொண்டே சிலர் சுடலைக் குச் சென்று எலும்புகளை எடுத்து வருவர். ஆடிக்கொண்டே ஆடு கோழிகளை பலி ஏற்கும் காட்சிகள் காண விரும்பாதவை ஆட்டு ஈரலைப் பிடுங்கி வாழைப் பழத்துடன் கடித்துத் தின்னும் சுடலைமாடர்களையும் பார்க்கலாம்.

கதை

அங்கியணிந்து கொண்டு ஆடும் சுடலைமாடனின் சிறிது வேறுபடுகிறது. ஆட்டத்தில் வெறி குறைவாக உள்ளது. இடம் மாற்றத்தால் இந்த வேறுபாடா அல்லது அது வேறு தெய்வமா என்று தெரியவில்லை. பெயர் ஒன்றாகவே உள்ளது. கதையில் கூறியிருப்பதற்குத் தக்க ஆடலாக அமைகிறது. நெல்லையை அடுத்துள்ள சீவலப்பேரி சுடலைமாடனைச் சிறப் பாகக் கருதி வழிபடுகின்றனர். தெய்வம் ஒன்றானால் ஏன் இந்தத் தனிச் சிறப்பு என்பது சிந்தனைக்கு உரியது.