115
மாசானசாமி சுடலைமாடனைப் போன்றே ஆடும் தெய்வம். சுடுகாட்டைக் காக்கும் பொறுப்புடைய தாக நம்புவர். ஆகையினால் அதன் பெயர் 'மயானசாமி' என்றுதான் இருந் திருக்க வேண்டும். சுடலைமாடனுக்கும் இந்தத் தெய்வத்துக்கும் இடையிலுள்ள அணுக்கத் தொடர்பால் அவனுடைய அண்ணன் என்று உறவுமுறை மக்களால் கற்பிக்கப்பட்டுள்ளது. அங்கி, தொப்பி, அரிவாள் பருந்தடி முதலியன இத்தெய்வத்துக்கு உண்டு- பலர் இந்தக் கோயிலுக்குச் செல்லமாட்டார்கள். இதே போன்று சந்திமாடன், பலமாடன், வண்ணாரமாடன், சங்கிலிமாடன் முதலிய தெய்வங்களையும் வணங்குகிறார்கள். அனைவரும் தனித்தனிக் கதைகளுடையவர். வேறுவேறு ஆடல் முறை கொண்டு தெய்வமேறி வெளிப்படுவர்.
கொல்லப்பட்ட
கபாலக்காரன் தீச்சட்டியைக் கையில் ஏந்தியவாறு ஆடும் தெய்வம்,கொதிக்கும் எண்ணெயில் கையிட்டுப் பலகாரங்களை எடுக்கும் ஆற்றலுடன் ஆடுவதைக் காணலாம். சங்கிலிப் பூதம் சூடான சங்கிலியைத் தோளில் தூக்கிப்போட்டு ஆடும் தெய்வம். சங்கிலி மாடனும் இதுவும் ஒன்றாக இருக்கலாம். வெள்ளைக் காரன் சாமி சாராயத்தைக் குடித்து புகைபிடித்து வெடியைக் கையில் தூக்கி ஆங்கிலத்தில் பேசி ஆடும் தெய்வம். இந்தக் கோயில் குமரியில் பூவியூர், பூசைப்புரைவிளை ஆகிய ஊர்களில் இருக்கிறது. இந்தத் தெய்வம் ஒரு வரலாற்று நாயகன் என்பதை அனைவரும் அறிவர். வில்லுப்பாட்டும் அதையே உணர்த்தும். இருப்பினும் மக்கள் வழிபடுகின்றனர். அதே போன்று வாழ்ந்து பிச்சைகாலனையும் சேர்வைக்காரனையும் தெய்வமாக வழிபடுகின்றனர். பிச்சைகாலன் ஆட்டம் மிகுந்த கோபத் தோற்றத்துடன் நடக்கும். மக்கள் அவனை நெருங்க அஞ்சி ஒதுங்கி நிற்பர். கோயில் சூரன்குடியிலிருக்கிறது. அவன் வாழ்ந்த ஊர் அதுவே. சேர்வைக்காரன்: சாத்தாங்குளம் பகுதியைச் சேர்ந்தவன். கோயில் குமரியை அடுத்த குண்டல், எட்டுக்கூட்டன் தேரிவிளை ஆகிய ஊர்களில் உள்ளது. ஆட்டம் துடிப்பாக நடக்கும். குஞ்சன்விளையில் மிக அண்மைக் காலத்தில் திருட்டுத் தொழில் நடத்திய கொடியவனான விருது (மக்கள் அழைக்கும் பெயர்)கொல்லப்பட்டு இன்று தெய்வமாக வணங்கப் படுகிறான். வில்லுப்பாட்டும் சாமி ஆட்டமும் சிறப்பாய் நடக்கிறது. கொடுமையாகக் கொல்லப் பட்டவர்களைக் கோயில் வைத்து நாட்டுப்புற மக்கள் கும்பிட்டு அருள் வேண்டி யிருப்பதை இந்தத் தெய்வங்களின் வணக்கம் வாயிலாக அறிந்து
கொள்ளலாம்.