உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திருநெல்வேலி

116

மாவட்டத்தைச் சேர்ந்த நாங்குநேரியில் பக்கத்திலிருக்கும் பரப்பாடி ஊரிலுள்ள தென்கரை மகாராசா கோயில், கதைக்கும் ஆடலுக்கும் சிறப்புடையது

ஆற்றில் தண்ணீர் நிறைந்து வருகிறது. ஒரு பெண் வட கரையிலிருந்து தென்கரையில் நிற்கும் தன் பசுவைப் பிடிக்க வருகிறாள். ஆற்றைக் கடக்க முடியாத இயலாமையால் வருந்தும்போது ஒருவர் தென்கரையில் குதிரைமீது வருகிறார். அவரைக் கூவியழைக்கிறாள்.

'ஆற்றுக்குத் தென்புறம் நிற்கும் ராசாவே என்பசுவை வடபுறம் துரத்தி விடுவாய்'

என்று அவள் கூறியதும் அவர் பசுவை அவளிடம் சேர்த்து விடுகிறார். பின்னர் அங்கு வந்தது தெய்வமே என்று நம்பி அனைவரிடமும் வியப்புடன் சொல்கிறாள். அன்று முதல் அந்தக் கோயிலுக்குத் தென்கரை மகாராசா கோயில் என்ற பெயர் ஏற்படுகிறது. பின் ஒருநாள் அந்தக் கோயிலில் நான்கு சகோதரர்கள் திருடுகிறார்கள். அது ஊராருக்குத் தெய்வ அருளால் அறிவிக்கப்படுகிறது. உடனே ஊர் மக்கள் திரண்டு. அவர்களைக் கையுங்களவுமாகப் பிடிக்கின்றனர். தலைவன் திருடர்களுக்குத் தண்டனையாக,

'கள்ளரின் கண்ணைக் கட்டி மறைத்து

என்று

டவிட்டு வீசு வெட்டு

ஆணையிடுகிறான்.

ஊர்த்

அவ்விதமே நால்வரும் ஊரின் நாலா பகுதிகளில் வெட்டப்படுகின்றனர். பணம் தேடி வருவோம் என்று சொல்லிச் சென்ற அண்ணன்மாரைத் தேடி அவர்களுடைய ஒரே தங்கை உணவுடன் வருகிறாள். இங்கே நால்வரும் வெட்டுண்டு கிடப்பதைக் கண்டதும் அழுது புலம்பி ஊருக்குச் சாபம் கொடுக்கிறாள்.

'கொன்றொழித்த வூரிலே கூவுவதுக்குக் கோழியும் குலைப்பதுக்கு நாயும்

இல்லாமல் போகுமே'

அவளிட்ட சாபம் பலித்ததோ இல்லையோ அறியமுடியாது. கோயிலிருக்கும் சித்தூர் என்ற சிற்றூர் அழிவுற்றிருப்பதை இன்றும் தடமழியாது காணமுடிகிறது.

திருடர்கள்